இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஜூலை, 2020

July 25 , 2020 Today's weather forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu

0
25-07-2020 நேரம் காலை 9:30 மணி இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நேற்று முன்தினத்தை போல உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேற்கு உள் ,தென் உள் ,உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் கணமழையும் பதிவாகலாம் பொதுவாக தமிழக வெப்பசலன மழைக்கு இன்று சிறப்பான நாள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.#சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மழை பதிவாகலாம் மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான  தகவல்களை பிற்பகலில் விரிவாக பதிவிடுகிறேன்.

இம்மாத இறுதி நாட்கள் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள் தென்மேற்கு பருவமழை மீண்டும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தீவிரமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.இம்முறை தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளும் தெற்கு கேரள மாநில மாவட்டங்களும் பலனை அடையும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 45 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 42 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 34 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 33 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  27 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  27 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  26 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  25 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
கொடைக்கானல் படகுக்குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 22 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  17 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) -  10 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) -  9 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PTO(கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) -  7 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
வேங்கூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 4 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 4 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  4 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) -  3 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 2 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 2 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) -  1 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக