22-07-2020 நேரம் காலை 10:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றைய சூழல்களே தொடரும் தமிழக தென் ,தென் உள் ,மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் 23-07-2020 ஆகிய நாளை முதல் தமிழக உள் மாவட்டங்களில் மீண்டும் வெப்பசலன மழை அதிகரிக்க தொடங்கலாம் விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.
அடுத்து பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதமும் தமிழக வெப்பசலன மழைக்கு சிறப்பானதாக இருக்கப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.தற்பொழுது நிலவி வரும் சூழல்களின் அடிப்படையில் பார்க்கப்போனால் செப்டம்பர் மாத இறுதியில் #Baikal ஏரி சுற்றுவட்டப் பகுதிகளில் அதாவது #சைபீரிய , #மங்கோலியா , #வடக்கு_சீன பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக குளிரான சூழல் நிலவ வாய்ப்புகள் உள்ளது #Baikal_Lake (#பைக்கல்_ஏரி) அருகே -50°C அளவிற்கும் குறைவான வெப்பநிலை நிலவலாம்.இதை ஏன் நீங்கள் இங்கே பதிவிடுகிறீர்கள் என்று கேட்கலாம் #சைபீரிய உயர் அழுத்தம் வீரியம் பெறுவதற்கும் நமது வட கிழக்கு பருவமழை க்கும் தொடர்புகள் உண்டு இந்த ஆண்டும் வட கிழக்கு பருவமழை இயல்பான நேரத்தில் தொடங்க வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
சின்கோனா (கோவை மாவட்டம்) - 49 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
சின்னகல்லாறு(கோவை மாவட்டம்) - 16 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 14 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
கடல்குடி (தூத்துக்குடி மாவட்டம்) - 10 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
ஒட்டப்பிடராம் (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 4 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 4 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
பீளமேடு , கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 3 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 3 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
வெள்ளக்கோயில் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 1 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 1 மி.மீ