18-07-2020 நேரம் காலை 10:30 மணி கடந்த காலங்களில் நான் பதிவிட்டு இருந்தது போல தற்சமயம் அந்த மேலடுக்கு சுழற்சி மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கிறது.இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து இருந்த தென்மேற்கு பருவமழை தற்சமயம் வீரியம் குறைந்து காணப்படுகிறது. அது மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர முற்படுகையில் இன்று #ஓமன் (#Oman) நாட்டின் கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக உள்ளது.மறுபுறம் நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல #நேபால் (#Nepal) #பூட்டான் (#Bootan) நாடுகளின் இமயமலை அடிவார பகுதிகளிலும் #அஸ்ஸாம் #மேற்கு_வங்க மாநிலத்தின் வடக்கே இருக்கும் இமயமலை அடிவார பகுதிகளிலும் கனமழை இன்று இரவு அல்லது நாளை முதல் பதிவாக தொடங்க வாய்ப்புகள் உள்ளது.இந்த முறை அப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சேதத்தை ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கும்.இது தொடர்பாக நேற்றைய நள்ளிரவு நேர் காணொளியில் விரிவாக நமது Youtube பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறேன் - https://youtu.be/4TDd9XYi17Q
அதேசமயம் தென்மேற்கு பருவமழையின் ரேகை (#Southwest_Monsoon_Axis) இமயமலை அடிவார பகுதிகளை அடைவதால் தென்மேற்கு பருவமழை வீரியம் குறைய தொடங்குகிறது (#weak_SWM) இதன் இந்த காலகட்டத்தை நாம் #பருவமழை_இடைவெளி (#Break_Monsoon) காலகட்டம் என வழங்குவோம்.இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வெப்பசலன மழை சிறப்பாக இருக்கும் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் மிக சிறப்பான வெப்பசலன மழை உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே பதிவாகும்.
18-07-2020 ஆகிய இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் ,வட உள் ,வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் நாளை முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை தீவிரமடையலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை அதாவது எந்தெந்த பகுதிகளில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம் அதாவது நேற்று காலை 8:30 மணியிலிருந்து 18-07-2020 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் இடையில் உள்ள இந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 96 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 44 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
பண்டன்துறை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்)- 23 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 4 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம்) - 3 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
மாசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 3 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 1 மி.மீ