இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 ஜூலை, 2020

17.07.2020 Tamilnadu and South andhra going to receive good rain in the upcoming days | Break Monsoon | Monsoon axis going to reach Foothills of Himalayas

0
17-07-2020 நேரம் மாலை 4:40 மணி இன்றைய பிற்பகல் நேரத்தில் நமது Youtube பக்க குரல் பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் #புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை மேகங்கள் குவிந்து வருவதை காண முடிகிறது இன்னும் சற்று நேரத்தில் #புலிகேட் ஏரியை ஒட்டிய #திருவள்ளுர் மாவட்ட வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அடுத்த சில மணி நேரங்களில் திருவள்ளுர் மாவட்டத்தில் இருக்கும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் - https://youtu.be/Yn39CRzBHp0

நான் சில நாட்களுக்கு முன்பாக அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல 18-07-2020 ஆகிய நாளை தமிழகத்தில் வெப்பசலன மழை மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் மேலும் 19-07-2020 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை தீவிரமடைய தொடங்கலாம்.மேலும் நான் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல 19-07-2020 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை Axis இமயமலை அடிவார பகுதிகளை அடைய உள்ளது அன்று முதல் தென்மேற்கு பருவமழை வீரியம் குறைந்துவிடும் அதாவது #Break_Monsoon சூழல்கள் உருவாகும் மறுபுறம் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு சிறப்பான வெப்பசலன மழை 19-07-2020 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு பதிவாக வாய்ப்புகள் உண்டு.

இவை ஒருபுறம் இருக்க நான் குறிப்பிட்டு இருந்தது போல #அஸ்ஸாம் , #மேற்குவங்க இமயமலை அடிவார பகுதிகளிலும் #நேபால் மற்றும் #பூட்டான் நாட்டின் இமயமலை அடிவார பகுதிகளிலும் மிக கனமழை , நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக