14-07-2020 நேரம் மாலை 6:20 மணி #மதுரை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட #மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தற்சமயம் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது குறிப்பாக #மதுரை மாநகரின் தெற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் சில இடங்களில் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் தற்சமயம் #காரியப்பட்டி ,#திருப்பரங்குன்றம் #வீரசோழன் ,#திருபுவனம் ,#திருவாதவூர் #பாலமேடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் மதுரை மாவட்டத்தை ஒட்டிய சிவகங்கை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.
மேலும் #செந்துரை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #அரியலூர் -#விருத்தாசலம் இடைப்பட்ட சாலையின் பல்வேறு இடங்களிலும் #திருப்பனந்தாள் உட்பட #கும்பகோணம் - #மயிலாடுதுறை இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் #ஸ்ரீமுஷ்ணம் ,#பெண்ணாடம் உட்பட #கடலூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் #ஈரோடு மாவட்டம் #கோபிசெட்டிபாளையம் - #பெருந்துறை இடைப்பட்ட பகுதிகளிலும் #கரூர் மாவட்டம் #பாளையம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த சில மணி நேரங்களில் #மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம் #மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய #காரைக்கால் மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் #கடலூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம்.அதே போல நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல் #சிவகங்கை மாவட்டத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.