இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஜூலை, 2020

July 11 ,2020 Today's Weather Forecast | Last 24 Hours Complete Rainfall forecast for tamilnadu and puducherry | Chennai rain possibilities

0
11-07-2020 நேரம் காலை 10:20 மணி நாம் நேற்றைய இரவு நேர பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல அதிகாலை நேரத்தில் #திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட தமிழக வட மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான வெப்பசலன மழை பதிவாகி இருக்கிறது குறிப்பாக #திருவள்ளுர் மாவட்டம் #திருத்தணி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 82 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல #திருவண்ணாமலை மாவட்டம் #வேம்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளில் 67 மி.மீ அளவு மழையும் #திருத்தணி_PTO பகுதியில் 55 மி.மீ அளவு மழையும் #அரக்கோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் 47 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #காரைக்கால்_கடற்கரை பகுதியில் 1 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

இன்று அடுத்த 24 மணி நேரத்திலும் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு கடந்த சில நாட்களை போன்றே நள்ளிரவு அல்லது அதிகாலை நேர மழையை எதிர்பார்க்கலாம்.இமயமலை அடிவார பகுதிகளில் சிறப்பாக தென்மேற்கு பருவக்காற்று குவிந்து வருகிறது மேலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வீரியம் குறைந்து காணப்படுகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று பகல் நேர வெப்பநிலையும் சற்று இயல்பாக உள்ளது இவை அனைத்தும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன.வழக்கம் போல அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.நேற்று எதிர்பார்த்து மழை பதிவாகாத சில பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகும் என நம்பலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 82 மி.மீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம்) - 76 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 67 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளுர் மாவட்டம்) - 55 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 47 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 43 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 41 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 40 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) -  39 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 39 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) -  35 மி.மீ
பல்லாவரம்(செங்கல்பட்டு மாவட்டம்)  - 33 மி.மீ
ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 33 மி.மீ
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்) -  32 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) -  32 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 26 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 24 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  24 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 23 மி.மீ
சைதாப்பேட்டை(சென்னை மாநகர்) - 22 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
ஸ்ரீ பெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  20 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) -  20 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) -  19 மி.மீ
சென்னை விமானநிலையம் ,மீனம்பாக்கம் (சென்னை மாநகர்) - 19 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 18 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 18 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) -  16 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 15 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 15 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) -  15 மி.மீ
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  14 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) -  13 மி.மீ
கள்ளிக்குடி(மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  12 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
ஆர்.கே.பேட்(திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 12 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) -  11 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) -  11 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 11 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  9 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
சின்னகல்லாறு(கோவை மாவட்டம்) - 8 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) -  8 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
அலக்கரை எஸ்டேட் ,குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 7 மி.மீ பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) -  7 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
மயிலாப்பூர் ,DGP அலுவலகம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 5 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 5 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ 
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 5 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 5 மி.மீ

5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக