11-07-2020 நேரம் இரவு 9:00 மணி #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை மழை மேகங்கள் பதம் பார்த்ததை தெல்லத்தெளிவாக அறிய முடிகிறது தற்பொழுது வரை #திருச்சி_விமான_நிலையம் பகுதியில் கிட்டத்தட்ட 69 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் #துவாக்குடி சுற்றுவட்டப் பகுதிகளில் 42 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது #சமயபுரம் சுயறுவட்டப் பகுதிகளில் இவை இரண்டு பகுதிகளை விட அதிக மழை பதிவாகியிருக்கும் வேண்டும் நாளை முழுமையான மழை அளவுகள் பட்டியல் கிடைக்கப் பெறுகையில் அது தெரிந்துவிடும்.தற்சமயம் #அரியலூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #திருச்சி மாவட்டம் #தொட்டியம் , #முசிறி அருகிலும் #நாமக்கல் மாவட்டம் #மோகனூர் ,#எருமப்பட்டி பகுதிகளின் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் தற்சமயம் தெற்கு ஆந்திர பகுதிகளில் இருந்து மழை மேகம் #வேலூர் மாவட்டம் #குடியாத்தம் பகுதிக்கு வடக்கே ஊடுருவ முற்பட்டு வருகிறது அதே போல #திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் - #சேத்துப்பட்டு இடையிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இவை தவிர்த்து #கரூர் ,#திருச்சி ,#நாமக்கல் மற்றும் #திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் அங்கும் இங்குமாக சாரல் ,தூறல் அல்லது லேசான மழை பதிவாகி வரலாம் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகி வரலாம்.
இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
================
திருச்சி விமான நிலையம் - 69 மி.மீ
விருதுநகர் AWS - 47 மி.மீ
துவாக்குடி - 42 மி.மீ
மதுரை AWS - 30 மி.மீ
மேலூர் - 28 மி.மீ
மணப்பாறை - 16 மி.மீ
கொடைக்கானல் - 5 மி.மீ
திருத்தணி PTO - 4 மி.மீ
இன்று மீண்டும் பதிவிட வேண்டிய சூழல் உருவாகும் என கருதுகிறேன்.அடுத்த சில மணி நேரங்களில் மேலும் சில பகுதிகளின் மழை அளவுகளுடன் இன்று இரவு மீண்டும் பதிவிடுகிறேன்.