09-07-2020 நேரம் காலை 11:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழக வெப்பசலன மழைக்கு சிறப்பான ஒரு நாள் என்று தான் சொல்ல வேண்டும் குஜராத் மாநிலத்தை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மிகவும் வலுக்குன்றய நிலையில் இருப்பதை காண முடிகிறது இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் அது முற்றிலும் வலுவிழந்து போகலாம்.தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் உயர் அழுத்தம் தொடர்பாக என்னிடம் சிலர் கேள்வி எழுப்பி இருந்தீர்கள் என்னை பொறுத்தவரையில் தெற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை அருகே இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மாலத்தீவுகள் அருகே நிலவும் அந்த சுழற்சி என்பது தென்மேற்கு பருவமழைக்கு முக்கியம் என்று தான் கூறுவேன்.அதன் சுழற்ச்சியானது தென் மேற்கு திசை காற்றை நெறிப்படுத்தவும் வளைத்து இந்தியாவின் மேற்கு கடலோர மாநிலங்களில் குவிக்கவும் உதவி புரிகிறது.தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் அந்த உயர் அழுத்தம் அங்கு இருப்பது என்பது இயல்பு தான்.அதனுடைய சிறு நகர்வு அடுத்த முறை தென்மேற்கு பருவக்காற்று வீரியம் பெறுகையில் தெற்கு கேரளாவிற்கும் சாதகமானதாக அமையும் என நம்பலாம் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
நேற்றுடன் ஒப்பிடிகையில் இன்று அடுத்த 24 மணி நேரம் தமிழக வெப்பசலன மழை வாய்ப்புகளுக்கு மேலும் சிறப்பானதாக அமையலாம் இன்று வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இவைத்தவிர்த்து வட , வட உள் ,மேற்கு உள் ,உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.10-07-2020 ஆகிய நாளை மேலும் சிறப்பான வெப்பசலன மழை காத்திருக்கிறது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய குரல் பதிவை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
#புதுச்சேரி யில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #காரைக்கால் பகுதியில் 1 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) - 84 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 68 மி.மீ
காரையூர்(புதுக்கோட்டை மாவட்டம்) - 67 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 56 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 52 மி.மீ
இடையாபட்டி(மதுரை மாவட்டம்) - 47 மி.மீ
வரட்டுல்பல்லம்(ஈரோடு மாவட்டம்) - 45 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 43 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 37 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 35 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 35 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 33 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 32 மி.மீ
கல்லிக்குடி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 32 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 31 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 30 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ கதண்டுப்பட்டு(திருப்பத்தூர் மாவட்டம்) - 30 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 30 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 28 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 27 மி.மீ
கொடைக்கானல் PTO (திண்டுக்கல் மாவட்டம்) - 27 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
காவிரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 25 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
தானியமங்கலம்(மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
புலிபட்டி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 21 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 20 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 19 மி.மீ
குண்டேரிபல்லம் (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 17 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
கோவை விமான நிலையம் ,பீளமேடு (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 15 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 13 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 12 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
நெடுங்கல்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
தள்ளாக்குளம் (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வாலாஜா (ராணிபேட்டை மாவட்டம்) - 10 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
தியாகதுர்கம்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 8 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 8 மி.மீ விருகாவூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
மரநடஹள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 8 மி.மீ
செம்மேடு(விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
அம்மாபேட்டை(ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
தாளவாடி (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
கோவை தெற்கு (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
பாடந்துறை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பெரியநாயக்கன் பாளையம் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
பார்வுட்(நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 5 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.