08-07-2020 நேரம் காலை 10:50 மணி நான் முன்னர் கூறியிருந்ததை போல 08-07-2020 இன்று முதல் அடுத்து வரக்கூடிய நாட்கள் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் வெப்பசலன மழைக்கான சிறப்பான நாட்கள் என்று தான் சொல்ல வேண்டும். #சென்னை மாநகரில் என்று வலுவான வெப்பசலன மழை பதிவாகும் என சிலர் என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருக்கின்றீர்கள் அடுத்து வரக்கூடிய நாட்கள் என்பது #சென்னை , #திருவள்ளுர் , #செங்கல்பட்டு ,#காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சிறப்பானதாகவே இருக்கும் விரிவாக கூற வேண்டும் என்றால் தற்சமயம் #குஜராத் அருகே நிலவி வரும் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வகுவிழந்து போகும் பொழுது இமயமலை அடிவார பகுதிகளை தென்மேற்கு பருவமழை அடைகிறது.பொதுவாக தென்மேற்கு பருவமழை AXIS இமயமலை அடிவார பகுதிகளை அடைகையில் இதனை நாம் #Break_Monsoon காலகட்டம் என்று அழைப்போம் இந்த காலகட்டம் தமிழக வெப்பசலன மழைக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் இது தொடர்பாக கடந்த காலங்களில் நான் பலமுறை விரிவாக விளக்கங்கள் வழங்கியுள்ளேன்.குறிப்பாக 10-07-2020 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களில் #சென்னை மாநகரில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.நான் மீண்டும் ஒரு முறை கூறி விடுகிறேன் இது நமக்கான வடகிழக்கு பருவமழை காலகட்டம் அல்ல.
பிற மாவட்ட மக்கள் உடனே கோபித்து கொள்ளாதீர்கள் #மதுரை மாவட்டம் உட்பட தென் உள் மாவட்டங்களாக இருக்கட்டும் #திருவண்ணாமலை மாவட்டம் உட்பட வட உள் மாவட்டங்களாக இருக்கட்டும் #திருச்சி மாவட்டம் உட்பட உள் மாவட்டங்களாக இருக்கட்டும் #புதுச்சேரி ,#கடலூர் ,#மயிலாடுதுறை ,#காரைக்கால் ,#நாகப்பட்டினம் மாவட்டங்கள் உட்பட வட கடலோர மாவட்டங்களாக இருக்கட்டும் #தஞ்சை ,#திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களாக இருக்கட்டும் #ஈரோடு ,#சேலம் ,#நாமக்கல் உட்பட மேற்கு உள் மாவட்டங்களாக இருக்கட்டும் அனைத்து உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கும் அடுத்து வரக்கூடிய நாட்கள் சிறப்பானதாக அமையலாம்.
#திருச்சி மற்றும் #மதுரை மாநகர பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய வார நாட்களில் அவ்வப்பொழுது வெப்பசலன மழை பதிவாகும்.இது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
அடுத்த 24 மணி நேர வானிலை
=====================
தென்மேற்கு காற்றின் வீரியம் குறைந்து உள்ளது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட உள் ,வட ,தென் உள் ,உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.#திருவள்ளுர் மாவட்டம் அருகே உள்ள தெற்கு ஆந்திர பகுதிகளிலும் இன்று சிறப்பாக மழை மேகங்கள் குவியலாம் மேலும் #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகும்.ஒவ்வொரு பகுதியாக விரிவாக எழுத்து பூர்வமாக பதிவிடுவது கடினம் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 7 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தின் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 94 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 94 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 80 மி.மீ
களையநல்லூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 80 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 70 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 67 மி.மீ
தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 65 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 56 மி.மீ
திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 52 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 50 மி.மீ
மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 46 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 46 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 45 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 44 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 43 மி.மீ
கோளியனூர்(விழுப்புரம் மாவட்டம்) - 42 மி.மீ மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 42 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 40 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 34 மி.மீ
ஸ்ரீ பெரும்பத்துர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 30 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 30 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 30 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 29 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 28 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) - 27 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 26 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 25 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 25 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
தன்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 25 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
காட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 21 மி.மீ
வரட்டுப்பல்லம் (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 19 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 19 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 19 மி.மீ
விருகவூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 17 மி.மீ
நீமூர்(விழுப்புரம் மாவட்டம்) - 17 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
மொரப்பாளையம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
அரசூர் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
சூரப்பட்டு(விழுப்புரம் மாவட்டம்) - 13 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 12 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 12 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 11 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 11 மி.மீ
திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
குடிதாங்கி(கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
வி.களத்தூர்(பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 9 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
செஞ்சி(விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
செம்மேடு(விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 8 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 6 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 6 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 5 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.