30-07-2020 நேரம் மாலை 4:30 மணி நாம் கடந்த குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல#திருவள்ளுர் மாவட்டத்தில் இருக்கும் #சென்னை மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளான #தாமரைப்பாக்கம் , #சோழவரம் ,#பெரியபாளையம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதற்கு இடையே உள்ள பகுதிகளிலும் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் தற்சமயம் #நாயினார்பாளையம் , #ரிஷிவந்தியம் , #தியாகதுர்கம் ,#சின்னசேலம் என #கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளிலும் நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #கள்ளக்குறிச்சி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #ஜவ்வாது_மலை பகுதிகளிலும் #மூங்கிள்பாளையம் உட்பட #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் #வந்தவாசி - #மேல்மருவத்தூர் இடைப்பட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த சில நிமிடங்களில் #தாமரைப்பாக்கம் - #பெரியப்பாளையம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருவள்ளுர் மவட்டத்தில் ஆங்காங்கே மழை தீவிரமடைய தொடங்கலாம் #சென்னை மாநகரின் ஒரு சில இடங்களிலும் மழை பதிவாகலாம் மேற்கு பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு. மேலும் அடுத்த சில மணி நேரங்களில் #விழுப்புரம் - #உளுந்தூர்பேட்டை புறவழிசாலையின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாக தொடங்கலாம் மேலும் #கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கலாம் மேலும் #ஜவ்வாது_மலை மழை மேகங்கள் #போளூர் உட்பட #திருவண்ணாமலை மாவட்ட மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/lkdGItCrD0Y
மழை மேகங்கள் தீவிரமடைந்ததும் மீண்டும் பதிவிடுகிறேன்.அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்நேர தகவல்களை குரல் பதிவும் செய்கிறேன்.