28-07-2020 நேரம் பிற்பகல் 3:40 மணி நாம் கடந்த பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களில் சில மணி நேரங்களுக்கு முன்பு எதிர்பார்த்து இருந்தது போல - https://www.facebook.com/1611990775491571/posts/3450769931613637/ தற்சமயம் #மூர்த்திக்குப்பம் ,#தவலக்குப்பம் ,#பாகூர் உட்பட #கடலூர் பகுதியை ஒட்டிய #புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #மானமேடு பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கலாம் மறுபுறம் #பெருங்களத்தூர் , #தாம்பரம் , #குரோம்பேட்டை , #பல்லாவரம் ,#ஆலந்தூர் , #தண்டலம் என #சென்னை மாநகரின் தெற்கு புறநகர் மற்றும் தெற்கு பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதையும் அறிய முடிகிறது இன்னும் சற்று நேரத்தில் #ஸ்ரீபெரம்பத்தூர் #செம்பரம்பாக்கம்_ஏரி சுற்றுவட்டப் பகுதிகளிலும் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம் அதேபோல #சென்னை_மாநகர் மேற்கு புறநகர் பகுதிகளிலும் மேற்கு ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் #கோவை மாவட்ட வடக்கு பகுதிகளான குறிப்பாக மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளான #குருடம்பாளையம் ,#கூடலூர் , #காரமடை பகுதிகளிலும் #அன்னூர் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன சற்று நேரத்தில் #அன்னூர் - #மேட்டுப்பாளையம் இடைப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் சிறப்பான மழை பதிவாகலாம்.இவைத்தவிர்த்து #புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளிலும் மழை மேகங்கள் குவிந்து வருகின்றன.
இது இன்றைய வெப்பசலன மழைக்கான தொடக்கம் (#Sample) மட்டும் தான்.மழை மேகங்கள் தீவிரமடைந்ததும் அதனுடைய அடுத்திககட்ட நகர்வுகள் மற்றும் அடுத்த சில மணி நேர வானிலை தொடர்பாகவும் நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.அடுத்த சில மணி நேரங்களில் வட மற்றும் வட உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக தொடங்கலாம்.
பதிவாகும் வெப்பசலன மழையை அனுபவியுங்கள் தோழர்களே...