28-07-2020 நேரம் இரவு 8:40 மணி கடந்த குரல் பதிவில் நிகழ்நேர தகவல்களுடன் நான் மழை வாய்ப்புகளில் குறிப்பிட்டு இருந்த பகுதிகளில் எல்லாம் மழை பதிவாகி இருக்கும் என நம்புகிறேன் சற்று முன்பு #தர்மபுரி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழைப் பொழிவை பதிவு செய்து வந்த மழை மேகங்கள் தற்சமயம் #சேலம் மாவட்டத்தில் தனது கால்தடத்தை பதித்து மழையை பல்வேறு இடங்களிலும் பதிவு செய்து வருகின்றன.தற்சமயம் #மேச்சேரி , #தோப்பூர் ,#ஓமலூர் , #கடையம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #இடையப்பட்டி , #பேலூர் , #சிட்லிங் ,#கருமந்துரை சுற்றுவட்டப் பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன புதுச்சேரி - #மரக்காணம் இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளின் வழியே கடல் பகுதியை அடைந்த மழை மேகங்கள் கிழக்கு நோக்கி கடல் பகுதிகளில் நகர்ந்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் சாரல் அல்லது தூரல் பதிவாகி வரலாம் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகி வரலாம்.அடுத்த சில மணி நேரங்களில் #சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் #கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கலாம்.
இரவு மீண்டும் பதிவிட வேண்டிய சூழல்கள் உருவாகும் என நம்புகிறேன்.
இதுவரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி
===================
கோலப்பாக்கம் , சென்னை - 84 மி.மீ
செம்பரம்பாக்கம் - 33 மி.மீ
சைதாப்பேட்டை , சென்னை - 27 மி.மீ
மாதவரம் - 27 மி.மீ
மீனம்பாக்கம் AWS - 22 மி.மீ
சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம் - 20 மி.மீ
தரமணி - 17 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் - 17 மி.மீ
கேளம்பாக்கம் - 16 மி.மீ
கடலூர் - 10 மி.மீ
சென்னை , நுங்கம்பாக்கம் - 10 மி.மீ
சோழிங்கநல்லூர் - 10 மி.மீ
நுங்கம்பாக்கம் AWS - 8 மி.மீ
பையூர் ARG - 6 மி.மீ
கொடைக்கானல் - 1 மி.மீ
நாளை காலை அனைத்து பகுதிகளின் பட்டியளையும் பதிவிடுகிறேன்.நள்ளிரவு நேரத்தை ஒட்டிய அதிகாலை நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.