இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூலை, 2020

2020.07.20 Evening 5:20 PM Current Weather Scenario of Tamilnadu | Upcoming Hours Rainfall Possibilities

0

20-07-2020 நேரம் மாலை 5:20 மணி நாம் கடந்த குரல் பதிவில் மழை வாய்ப்புகளில் எதிர்பார்த்து இருந்தது போல  #சத்தியமங்கலம் சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் #கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கும் பகுதிகள் உட்பட #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை மேகங்கள் தீவிரமடைய தொடங்கியிருக்கின்றன #ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் அந்த குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #கோடியாக்கரை ,#வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் #பால்க்_ஜலசந்தி கடல் பகுதிகளில் இருந்து மழை மேகங்கள் தடம் பதித்தன இதைப்போன்ற காலகட்டத்தில் இது ஒரு அரிதான சம்பவம் தான் சாதகமற்ற சுழல்களின் காரணமாக அவை விரைவில் வலுவிழந்து விடும் ஆனப்பொழுதும் கடல் பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் #நாகை மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளில் மழையை பதிவு செய்திருக்கிறது என்பதனை தெரிந்துக் கொள்ளுங்கள். - https://youtu.be/KNIkr7gYsus

இவைத்தவிர்த்து தற்சமயம் #காரைக்குடி , #தலக்காகவூர் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #கோத்தாரி ,#தேவக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் #காளையர்கோயில் ,#அனந்தூர் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அதேபோல #மூலனூர் ,#கோடாரங்கி_கீரனூர் உட்பட #தாராபுரம் - #அரவாக்குறிச்சி இடைப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல #வெள்ளகோயில் ,#கரூர் பகுதிகளிலும் #கொடுமுடி ,#பவானி , #பொள்ளாச்சி மற்றும் #பழனி அருகிலும் #திருமங்கலம் ,#காரியப்பட்டி உட்பட #மதுரை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளை ஒட்டியும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அடுத்த சில மணி நேரங்களில் #நாமக்கல் மற்றும் #கரூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம்.

தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கும் சில பகுதிகளின் மழை அளவுகள்
===================
பாளையங்கொட்டை - 34 மி.மீ
அரூர் - 19 மி.மீ
ஏற்காடு - 16 மி.மீ
கொடைக்கானல் - 11 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் - 9 மி.மீ
திருநெல்வேலி AWS - 5 மி.மீ
திருமயம் - 3 மி.மீ
சேலம் - 1 மி.மீ
திருச்சி விமான நிலையம் - 1 மி.மீ

மேலும் பல பகுதிகளின் மழை அளவுகளுடன் அடுத்த சில மணி நேரங்களில் பதிவிடுகிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக