07-07-2020 நேரம் காலை 10:50 மணி நான் நேற்றைய நள்ளிரவு நேர காணொளியில் நமது Youtube பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழையின் அளவு கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்க தொடங்கலாம் இன்று வட உள் மற்றும் வட மாவட்டங்களில் மட்டுமே அல்லாது தென் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் முன்னேர் கூறியிருந்ததை போல நாளை முதல் தமிழகத்தில் மேலும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் நமது youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
புதுச்சேரி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று இரவு 2 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 57 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 42 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 38 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 36 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 35 மி.மீ
சின்னகல்லாறு(கோவை மாவட்டம்) - 32 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
வால்பாறை PAP(கோவை மாவட்டம்) - 25 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 24 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 23 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) / 22 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
பார்வுட்(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 10 மி.மீ
செருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
மூகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 6 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
சங்கிரிதுர்க்(சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
கடலடி (தூத்துக்குடி மாவட்டம்) - 5 மி.மீ
மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் தமிழக பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.