இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஜூலை, 2020

2020 July 03 Today's Weather Forecast | Last 24 Hours rainfall data of tamilnadu and puducherry

0

03-07-2020 நேரம் காலை 10:20 மணி தற்போது கர்நாடக, கோவா ,மஹார்ஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் நாம் முன்பு எதிர்பார்த்து இருந்ததை போல தென்மேற்கு பருவமழை சற்று வீரிய பெற்று இருப்பதை அறிய முடிகிறது கடந்த 24 மணி நேரத்தில் #கர்நாடக மாநிலம் #Honavar பகுதியில் கிட்த்தட்ட 173 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது அதே போல #Magalore விமான நிலையத்தில் 161 மி.மீ அளவு மழையும் #மங்களூரு கடற்கரையில் கிட்டத்தட்ட 149 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாகலாம்.கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் #கண்ணூர் மற்றும் #கோழிக்கோடு பகுதிகளில் முறையே 61 மி.மீ மற்றும் 63 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பசலன மழை குறைந்து இருக்க போகிறது அதே சமயம் #கிருஷ்ணகிரி , #திருப்பத்தூர் ,#ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் சேலம்,தர்மபுரி மாவட்டத்தின் சில இடங்களில் அவ்வப்பொழுது விட்டு விட்டு  மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது விட்டு விட்டு சாரல் , தூறல் ஒரு சில இடங்களில் மிதமான மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம் தற்பொழுதே நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் அங்கும் இங்குமாக மழை பதிவாகி வருவதையும் அறிய முடிகிறது நள்ளிரவு அதிகாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பதிவாகும் மழையின் அளவு அதிகரிக்கும். அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி பகுதியில் 14 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 1 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
சின்கோனா (கோவை மாவட்டம்) - 55 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 46 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 43 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 42 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 41 மி.மீ
சின்னகள்ளாறு (கோவை மாவட்டம்) - 39 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 36 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 35 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 33 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 27 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 26 மி.மீ
அப்பர்பவாணி (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) -  24 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) -  23 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) -  22 மி.மீ
சங்கிரிதுர்க் - சங்ககிரி(சேலம் மாவட்டம்) -  20 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) -  19 மி.மீ
சேலம் மாநகர் (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) -  18 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  18 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 17 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) -  16 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  15 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  14 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
மனம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம்) -  14 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 13 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) -  13 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 13 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) -  12 மி.மீ
ராஜசிங்கமங்கலம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  12 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பார்வுட்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
பாடந்துரை ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரால்ட்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வீருகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 9 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) -  9 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) -  8 மி.மீ
நீமூர் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 8 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கொள்ளிடம் - ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 7 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 7 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  6 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) -  6 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 6 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 5 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) -  5 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) -  5 மி.மீ


5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் தமிழக பகுதிகளை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக