இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூன், 2020

Nisarga cyclones crossed the coast near south of alibag | current details of nisarga cyclone

0

03-06-2020 நேரம் மாலை 5:40 மணி நான் பிற்பகலில் சில மணி நேரங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தது போல நண்பகல் 12:30 முதல் பிற்பகல் 2:30 மணிவரையிலான காலகட்டத்தில் தீவிர புயலான (#Severe_Cyclone) #Nisarga (#நிசர்கா) #Alibag நகருக்கு தெற்கே முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையமும் சற்று முன்பு தமது அதிகார பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.மேலும் #Alibag பகுதியில் கிட்டத்தட்ட அதிகபட்சமாக 101.9 கி.மீ வேகத்தில் காற்று வீசி இருப்பதையும் அது உறுதிப் படுத்தியுள்ளது.

தற்சமயம் அந்த புயலின் வெளிப்புற பகுதி #Nashik நகரை நெருங்கி வருகிறது மேலும் #sangamner ,#ghatghar ,#manchar சுற்றுவட்டப் பகுதிகளில் வலுவான புயலின் வெளிப்புற பகுதி பதிவாகி வருகிறது அதன் மையக்கண் பகுதியானது #mandoshi ,#pimpari  மற்றும் #bhimashankar_jyothirlinga வனப்பகுதிகளில் பதிவாகி வருகிறது.#மும்பையை விட்டு அந்த புயல் விலகி செல்கிறது.இருந்தாலும் #மும்பை மாநகரில் இன்று இரவு வரை அடுத்த சில மணி நேரங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்தே இருக்கும்.

சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த புயலின்  வெளிப்புற பகுதி ஒரு 20 நிமிடங்கள் #தாராவி (#Darave) அருகே பதிவாகிவந்தது அந்த சில நிமிடங்களில் அப்பகுதியில் கிட்டத்தட்ட 51 மி.மீ அளவு மழை பதிவானது.

இதுவரையில்
#Darave - 51 மி.மீ
#CBD_Belapur - 50 மி.மீ
#Belapur - 49 மி.மீ
#Nerul - 46 மி.மீ
#Khairna - 45 மி.மீ
#Colaba_pumping_station - 41 மி.மீ
#Colaba_fire_station - 40 மி.மீ

அடுத்த சில மணி நேரங்களில் மாநகரின் புறநகர் பகுதிகளின் நிலவரமும் தெரியவரும்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக