இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஜூன், 2020

2020 june 04 last 24 hours rainfall data | Today's weather report

0
04-06-2020 நேரம் காலை 9:50 மணி நான் நமது அதிகாலை நேர குரல் பதிவில் Youtube பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல நேற்று மஹாராஷ்டிர மாநில கடலோர பகுதிகளில் கரையை கடந்த அந்த #NiSARGA புயலானது நேற்று மாலையில்  ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து இருந்தது.இன்று காலை அது மேலும் வலுக்குறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் (#Depression) என்கிற நிலையில் #Vidharba வுக்கு மேற்கே நிலைக்கொண்டு இருந்ததை வானிலை ஆய்வு மையமும் தமது அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கிறது.அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது கிழக்கு - வட கிழக்கு திசையில் பயணித்து மேலும் வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

தற்பொழுது #Vidharba வுக்கு மேற்கே நிலைக்கொண்டு இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாம் எதிர்பார்த்தது போல கிழக்கு - வட கிழக்கு அடுத்த சில மணி நேரங்களில் வலு குறைந்து நகரும் பட்சத்தில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை மேகங்கள் குவிய அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் அதனை ஒட்டிய #திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் மற்றும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் இன்று சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உருவாகலாம்.#சென்னை மாநகரின் மழை வாய்ப்புகளை பொறுத்தவரையில் அது கடல் காற்றின் சாதகத்தை பொறுத்தது.இது தொடர்பான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவின் வாயிலாக உறுதிப் படுத்துகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 49 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
கெட்டை (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ

#Puducherry_Weather
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக