கரையை கடக்க தொடங்கியது NISARGA புயல்
==========================
03-06-2020 நேரம் பிற்பகல் 1:00 நாம் எதிர்பார்த்ததை போல அந்த #NISARGA (#நிசர்கா)புயலின் மையக்கண் பகுதி #மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள #மும்பை மாநகரின் தெற்கு புறநகர் கடலோர பகுதியான #Harihareshwar அருகே நுழைய தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது.#தற்சமயம் #Rajapuri - #Harihareshwar இடையே அதன் மையக்கண் பகுதி நிலைகொண்டு இருக்கிறது.மேலும் அதன் மையக்கண் பகுதியின் வெளிப்புற வலுவான சுவர் பகுதி (#Wall_of_the_Nisargas_Eye) #Roha ,#alibag ,#kashid ,#salav ,#dapoli ,#lavasa ,#mahad ,#raigad வனப்பகுதி என அதன் சுற்றிவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகிறது தற்சமயம் அப்பகுதிகளில் கனமழை பதிவாகி வரலாம் மேலும் #Lonavala ,#rasayani உட்பட மும்பை மாநகர் பகுதிகளிலும் அதன் வெளிப்புற பகுதி தீவிரமாக பதிவாகி வருகிறது.
அதனுடைய நகர்வுகளை பொறுத்தவரையில் அது கரையை கடந்த பின் வட-வட கிழக்கு திசையில் நகர முற்படும் இதன் காரணமாக அதன் பையப்பகுதியானது #மும்பை மாநகரின் கிழக்கு பகுதிகளில் மற்றும் அதன் கிழக்கு புறநகர் பகுதிகளின் வழியே பயணிக்கும் அடுத்த சில மணி நேரங்களில் #மும்பை மாநகரம் சூறாவளிக் காற்றையும் கணமழையையும் எதிர்கொண்டு தான் தீர வேண்டும்.மேலும் #Pune ,#Nashik பகுதிகளிலும் கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இன்று பிற்பகல் , மாலை நேரங்களில் #மும்பை மாநகரில் மணிக்கு 100 கி.மீ க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் மேலும் அது #Malegaon ,#jalgoan பகுதிகளின் வழியே பயணித்து மத்திய பிரதேச மாநிலத்தை அடையும்.