03-06-2020 காலை 10:40 மணி தற்சமயம் #NISARGA (#நிசர்கா) புயலானது ஒரு தீவிர புயல் (#Severe_Cylone) என்கிற நிலையை அடைந்து இன்று காலை 9:00 மணி வாக்கில் 170 கி.மீ கள் #மும்பைக்கு தென்-தென் மேற்கே நிலைகொண்டு இருந்தது.நான் இந்த பதிவுடன் இணைத்து பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படங்களில் கூட அந்த #நிசர்கா புயலின் மையப்பகுதியை தெளிவாக காண முடிகிறது.#மும்பை மக்கள் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் வெள்ளப்பெருக்கை பலமுறை கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருப்பார்கள் ஆனால் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகத்திலான சூறாவளிக் காற்றை கடந்த 100 ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டில் தான் எதிர்கொள்ள இருக்கிறார்கள். #கொரோணா நோய் தொற்றின் காரணமாக மும்பை மாநகரில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை நிலவி வருவதாக நாம் கேள்விப்படுகிறோம். தற்போதைய இந்த இக்கட்டான சூழலில் இந்த புயலினால் ஏற்பட இருக்கக்கூடிய சேதங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது.இன்று பிற்பகலில் #நிசர்கா புயலின் மையப்பகுதி #மும்பை மாநகரின் தெற்கு புறநகர் கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
தமிழக மழை வாய்ப்புகள்
==================
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.கடந்த 24 மணி நேரத்திலும் சிறப்பான மழை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 91 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 80 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 64 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 64 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 51 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 51 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 47 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 41 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 23 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 15 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 12 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
நேரமின்மை காரணமாக 10 மி.மீ மற்றும் அதறக்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கக் கூடிய சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
#Nisarga_cyclone #pray_for_munbai #nisarga_mumbai#pondicherryweatherman #ALIBAG #Fact on Cyclone Nisarga #நிசர்கா) #NISARGA_CYCLONE #Mumbai #mumbai_cyclone
