இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2020

June 27 , 2020 Today's Weather Forecast | Last 24 Hours Rainfall data | Active SWM | Westernghats

0
27-06-2020 நேரம் காலை 9:40 மணி நாம் நேற்றைய இரவு பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல அதிகாலை நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது தற்சமயமும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகி வருகிறது குறிப்பாக #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் , #பெரியாறு_அணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பாக காற்று குவிந்து வருவதை ராடார் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் வாயிலாக அறிய முடிகிறது இவைத்தவிர்த்து #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் கேரளாவை ஒட்டியிருக்கும் #தேனி மாவட்ட பகுதிகளில் தற்சமயம் மழை பதிவாகி வர வேண்டும் அடுத்த சில மணி நேரங்களில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் இவைத்தவிர்த்து #கோவை , #தேனி உட்பட மேற்கு மாவட்டங்களில் அங்கும் இங்குமாக விட்டு விட்டு சாரல் , தூரல் பதிவாகலாம் சில இடங்களில் அவ்வப்பொழுது மிதமான மழையும் பதிவாகலாம்.

இன்று வட-வட மேற்கு திசையில இருந்து காற்று திருவள்ளுர் மாவட்டத்தில் குவிய வாய்ப்புகள் உண்டு கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து இன்று #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  41 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) -  28 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) -  27 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
தொட்டியம்பட்டி புறவழிச்சாலை (திருச்சி மாவட்டம்) - 23 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) -  20 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
காரையூர்(புதுக்கோட்டை மாவட்டம்) -19 மி.மீ
திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 19 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) -  18 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 17 மி.மீ
பூதலூர் (தஞ்சை மாவட்டம்) - 16 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 13 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) -  13 மி.மீ
ஊத்தாங்கரை தாலுக்கா அலுவலகம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
நந்தியார் Head (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) -  9 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 8 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ 
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
பாடந்துறை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) -  7 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம்(திருச்சி மாவட்டம்) - 6 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) -  6 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
பொன்மலை (திருச்சி மாநகர்) -  5 மி.மீ
உடையளிபட்டி(புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 4 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 4 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 4 மி.மீ 
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) -  4 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  3 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) -  3 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 3 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 3 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம்) -  3 மி.மீ
புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 2 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) -2 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  2 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  2 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) -  1 மி.மீ

#Puducherry_Weather
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக