இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூன், 2020

2020 June 28 Today's weather forecast in tamil | Last 24 hours rainfall data of tamilnadu and puducherry | chennai rainfall

0

28-06-2020 நேரம் பிற்பகல் 1:30 மணி நாம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே #சென்னை மாநகர் மற்றும் அதனை ஒட்டிய #திருவள்ளுர் மற்றும் #செங்கலப்பட்டு மாவட்டங்களில் இருக்கும் அதன் புறநகர் பகுதிகளில் அங்கும் இங்குமாக மழை பதிவாக தொடங்கியது.#போரூர் , #தாம்பரம் , #பல்லவாரம் , #குரோம்பேட்டை மற்றும் #பெருங்களத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் தற்சமயம் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #அடையாறு ,#வேளச்சேரி ,#சோழிங்கநல்லூர் ,#திருவான்மியூர் ,#ஸ்ரீபெரம்பத்தூர் சுற்றிவட்டப் பகுதிகளிலும் சற்று  வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.மேலும் தற்சமயம் #பெரம்பலூர் மற்றும் #அரியலூர் அருகிலும் #சேலம் மாவட்டம் #ஆத்தூர் அருகே #கங்கவல்லி , #தலைவாசல் , #அரும்பாவூர் சுற்ருவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளான #கோபிசெட்டிபாளையம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

இன்று அடுத்த 24 மணி மணி நேரத்தில் தமிழக உள் ,மேற்கு உள் ,வட உள் ,டெல்டா மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு நான் மேற்கூறிய பிரிவுகளின் கீழ் அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும் நான் இங்கே பதிவிட விரும்பவில்லை.#சென்னை , #காஞ்சிபுரம் , #திருவள்ளுர் , #செங்கல்பட்டு , #விழுப்புரம் ,#வேலூர் ,#ராணிப்பேட்டை ,#புதுச்சேரி ,#கடலூர் மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது. இன்று நாம் மேற்கு மாவட்டமான #கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் வெப்பசலன மழை பதிவாகலாம் #கோவை மாநகரில் சில இடங்களில் மழை பதிவானாலும் ஆச்சரியம் இல்லை.#கோவை மாநகரின் சில இடங்களில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் அதேபோல #ஈரோடு , #சேலம் மாவட்டங்களின்  ஒரு சில இடங்கள் உட்பட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் மேலும் #தஞ்சை மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களிலும் ஆங்காங்கே இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.வெப்பசலன மழையை பொறுத்தவரையில் இன்று கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் நிறைய இடங்களில் மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

========================

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 33 மி.மீ

பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  29 மி.மீ

உதகை (நீலகிரி மாவட்டம்) -  27 மி.மீ

சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) -  27 மி.மீ

எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ

வால்பாறை PAP  (கோவை மாவட்டம்) - 24 மி.மீ

சாத்தனூர் அணை (திருவண்ணாமலை மாவட்டம்) -  23 மி.மீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  23 மி.மீ

கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  23 மி.மீ

சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 22 மி.மீ

நாட்ராம்பள்ளி(திருப்பத்தூர் மாவட்டம்) - 22 மி.மீ

வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 22 மி.மீ

திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  20 மி.மீ

கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) -  17 மி.மீ

மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ

பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  16 மி.மீ

வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 14 மி.மீ

உளுந்தூர்பேட்டை (கள்ளகுறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ 

உதகை வடக்கு (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ

தேக்கடி (தேனி மாவட்டம்) -  13 மி.மீ

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ

குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) -  10 மி.மீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 9 மி.மீ

தன்ட்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ

கிண்ணகோரை(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ

கோத்தகிரி (நீலகிரி) 8மிமீ

தாமரை பாக்கம்(திருவள்ளூர் மாவட்டம்) - 7 மி.மீ

குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  7 மி.மீ

உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 7 மி.மீ

வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ

துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ

சங்கிரிதுர்க்(சேலம் மாவட்டம்) - 5‌ மி.மீ

ஆழியாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 4 மி.மீ

சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 4 மி.மீ

பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 4 மி.மீ

பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 3 மி.மீ

கெத்தி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ

சின்கோனா(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ

சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ

கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) -  2 மி.மீ

வேலூர் (வேலூர் மாவட்டம்) - 1 மி.மீ

ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்) - 1 மி.மீ

திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) - 1 மி.மீ

மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 1 மி.மீ

திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 1 மி.மீ


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக