06-06-2020 நேரம் காலை 10:00 மணி நாம் நேற்று இரவு மழை வாய்ப்புகளில் எதிர்பார்த்து இருந்தது போல #கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான தென் மேற்கு பருவமழை பதிவாகி இருப்பதை அறியமுடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது கேரள மாநில தென் மாவட்டங்களுக்கும் #கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கும் #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கும் சிறப்பானதாக இருக்கலாம்.
தமிழக உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் நேற்றை போலவே இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை அதாவது எந்தெந்த பகுதிகளில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதனை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.மேலும் நிகழ் நேரத்திலும் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
#சென்னை க்கு எப்பொழுது மழை பதிவாகும் என சில நண்பர்கள் நிறையமுறை கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரக்கூடிய நாட்களில் உருவாக தொடங்கும் அந்த நேரத்தில் சென்னை மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பாக காற்று குவியும் ஆகையால் நாளை அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களில் #சென்னை மாநகரிலும் மழையை எதிர்பார்க்கலாம். இது தொடர்பான விரிவான தகவல்களை அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 88 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 79 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 64 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 54 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 44 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 43 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 37 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
மன்னார்க்குடி (திருவாரூர் மாவட்டம்) - 24 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 18 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 15 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
பரலியார் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 14 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 14 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ
கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மேட்டூர் (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
தமிழகத்தில் 10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.10 மி.மீ க்கும் குறைவாக நிறைய இடங்களில் மழை பதிவாகியுள்ளது.உங்களது ஊரின் மழை அளவை அறிய உங்கள் ஊரின் பெயரை Comment செய்யுங்கள்.
புதுச்சேரி மாநிலம்
================
புதுச்சேரி - 8 மி.மீ
காரைக்கால் - 3 மி.மீ