06-06-2020 நேரம் பிற்பகல் 2:20 மணி கடந்த 2 நாட்களை போலவே #திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்பகல் வாக்கிலயே பதிவாக தொடங்கிவிட்டன தற்சமயம் #வேடசந்தூர் ,#தடிக்கொம்பு ,#கன்னிவாடி சுற்றிவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அது மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து #எரியோடு ,#வடமதுறை ,#அய்யாலூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதன் பின்னர் #இளங்குறிச்சி ,#இடையப்பட்டி பகுதிகளிலும் மழையை பதிவு செய்ய முற்படலாம்.மேலும் #கரூர் மாவட்ட கிழக்கு மற்றும் #திருச்சி மாவட்ட பகுதிகளிலும் அடுத்து சில மணி நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.மேலும் #சேலம் மாவட்டம் #பூலாம்பட்டி , #அம்மாப்பேட்டை ,#மேட்டூர் ,#ஜலகண்டபுரம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளன அதைப்போல முன்பு #அன்னூர் அருகே மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்சமயம் #கருமத்தம்பட்டி அருகில் பதிவாகி வருக்கின்றன.நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #திருச்சி ,#புதுக்கோட்டை , #சேலம் ,#நாமக்கல் , #கோவை , #தஞ்சை மற்றும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளில் உட்பட தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மேலும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று #கடலூர் மாவட்ட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் இன்று சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள்.நான் உதரணத்துக்காக சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறேன் இவைத்தவிர்த்து இதர உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நமது youtube பக்கத்தில் விரிவான குரல் பதிவை 1:00 மணி வாக்கில் பதிவிட்டு இருக்கிறேன்.அடுத்து சில மணி நேரங்களில் நிகழ் நேர மழை வாய்ப்புகளுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் #கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்றும் தென்மேற்கு
பருவமழை ஆங்காங்கே பதிவாகும் தற்போதும் ஆங்காங்கே மழை பதிவாகி கொண்டு தான் இருக்கிறது #தேவாலா பகுதிகளில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.நாளை முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.நான் ஏற்கனவே பதிவிட்டு இருந்தது போல 10-06-2020 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் #அவலாஞ்சி அல்லது #அப்பர்பவாணி பகுதிகளில் ஒரே நாளில் 400 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகளை காண - https://m.facebook.com/story.php?story_fbid=3289092384448060&id=1611990775491571