இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஜூன், 2020

Detailed Info About Southwest monsoon 2020 | effect of southwest monsoon in tamilnadu | low pressure likely to form in bay around 9th june 2020 | active monsoon

0
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை எப்பொழுது தீவிரமடைய தொடங்கலாம்.
========================
05-06-2020 நேரம் காலை 10:40 மணி ஜூன் 10 (10-06-2020) ஆம் தேதி வாக்கில் மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #தென்மேற்கு_பருவமழை (#Southwest_Monsoon) தீவிரமடைய தொடங்கலாம்.இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய வாரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக்கூடும் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் சில இடங்களில் குறிப்பாக அவலாஞ்சி ,அப்பர்பவாணி ,மூக்குறுத்தி வனப்பகுதிகளில் அதி கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.மேலும் #கர்நாடக மாநில #காவிரி_நீர்பிடிப்பு பகுதிகள் உட்பட #கேரளா ,#கர்நாடகா , #கோவா மற்றும் #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள்   உட்பட அம்மாநில மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பதிவாகும்.இந்த ஆண்டின் பருமழையில் முதல் #Active_Phase என்றும் இதனை கூறலாம்.(#First_Active_Phase_of_SWM_in_2020).

வங்கக்கடல் பகுதிகளில் அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி
=========================
04-06-2020 ஆகிய நேற்று மாலை நேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டு இருந்த அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது (#Well_Marked_low_pressure_Area) அதாவது நேற்று முன் தினம் கரையை கடந்த நிசர்கா புயலின் மிச்சம் என்றே அதனை வழங்கலாம்.தற்சமயம் அது மேலும் வகுகுறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை உத்திரபிரதேசம் மாநிலம் #வாரணாசி அருகே நிலைக்கொண்டு இருப்பதை அறிய முடிகிறது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது முற்றிலும் வகுவிழந்து போகும்.அதன் பின்னர் குறிப்பாக 08-06-2020 (ஜூன் 8)  அல்லது 09-06-2020 (ஜூன் 9) ஆம் தேதிகளின் வாக்கில் வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Low_Pressure_Area) உருவாகலாம்.வங்கக்கடல் என்றதும் உடனே தமிழகத்துக்கு வருமா? என்பதை போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.இது நமக்கான பருவமழை அல்ல பொதுவாக இதைப்போன்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகுவது இயல்பு தான் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை கூட அடையலாம் அது ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தில் நுழைந்து இந்தியாவின் மத்திய பகுதிகளில் நிலத்திலயே மேற்கு - வட மேற்கு அல்லது மேற்கு திசையில் பயணிக்கும்.இதன் காரணமாக அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்கையில் குறிப்பாக 09-06-2020 அல்லது 10-06-2020 ஆம் தேதிகளின் வாக்கில் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் தீவிரமடையும்.

பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் அதிக பலணடைய வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================

நீலகிரி மாவட்டம் : 
###############
#எருமாடு ,#நெல்லியம் , #அப்பர்பவாணி  ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.

கோவை மாவட்டம் : 
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு  , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.

தேனி மாவட்டம் : 
##############
 #பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.

கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.

நெல்லை மாவட்டம்:
==================
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக