06-06-2020 நேரம் மாலை 5:30 மணி அடுத்த சில நிமிடங்களில் #மணமேல்குடி - #அதிராம்பட்டினம் இடைப்பட்ட அநேக கடலோர பகுதிகளிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் அதேபோல #மன்னார்குடி , #பட்டுக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக தொடங்கலாம்.நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல #மன்னார்குடி , #நீடாமங்கலம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருவாரூர் மாவட்டத்தின் அநேக இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. #கும்பகோணம் நகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.
நான் இங்கே பதிவேற்றம் செய்த்திருக்கும் ராடார் படம் மாலை 5:00 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்சமயம் #பேராவூரணி , #கரம்பைக்குடி ,#வெட்டிக்காடு ,#ஏம்பல் , #ஆவுடையார்கோயில் பகுதிகள் அருகே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.#மிமீசல் , #கோட்டைப்பட்டினம் அருகிலும் அடுத்த சில நிமிடங்களில் மழை பதிவாகலாம்.மேலும் தற்சமயம் #காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.#பேரம்பாக்கம் , #வாலாஜாபாத் மற்றும் #ஸ்ரீபெரம்பத்தூர் அருகில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #வேலூர் பகுதிக்கு தெற்கே #காணியம்பாடி , #கண்ணமங்களம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #வேம்பாக்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #கடலூர் மாவட்டம் #திருக்கலப்பூர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.