07-06-2020 நேரம் காலை 8:40 மணி நாம் எதிர்பார்த்தது போல கடந்த 24 மணி நேரத்தில் #தேவாலா உட்பட #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் சிறப்பான தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது மேலும் #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.மறுபுறம் #தமிழக உள் மாவட்டங்களிலும் நேற்று பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை பதிவானது உங்களுக்கு தெரிந்தது தான்.உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக #திண்டுக்கல் மாவட்டம் #வேடசந்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 79 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இதே சூழல்களே தொடரும்.அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.சில மணி நேரங்களுக்கு ஒருமுறை நிகழ் நேரத்திலும் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.10-06-2020 ஆம் தேதிக்கு பிறகு நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் மிக கனமழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 127 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவகம் (நீலகிரி மாவட்டம்) - 118 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 95 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 89 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 79 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 76 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 45 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 44 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 44 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 43 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 43 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 41 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 39 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம்) - 38 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 35 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 34 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
கடவூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
தொட்டியப்பட்டி (திருச்சி மாவட்டம்) - 28 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 27 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 25 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
ஓரத்தநாடு ARG (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 20 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
அப்பர்பவாணி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
ஆவுடையார் கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 18 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சை மாவட்டம்) - 15 மி.மீ
விராலிமலை (புதுகோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 11 மி.மீ
முத்துபேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 11 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
புதுசத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 10 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 10 மி.மீ
#Puducherry_Weather
கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே வழங்கியுள்ளேன்.பிற பகுதிகளின் நிலவரம் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் உங்கள் ஊரின் பெயரை Comment செய்யுங்கள்.