இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூன், 2020

2020 June 29 Today's Weather Report of tamilnadu and puducherry | Last 24 Hours rainfall data of tamilnadu and Puducherry

0
29-06-2020 நேரம் பிற்பகல் 2:10 மணி நான் காலையில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் #புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் சிறு சிறு மழை மேகங்கள்  தொடர்ந்து குவிந்து வருகின்றன அடுத்த சில நிமிடங்களில் #புலிகேட் ஏரியை ஒட்டிய வடக்கு திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் #திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம் மேலும் சில மணி நேரங்களாக #ராமநாதபுரம் மாவட்டம் #ராமநாதபுரம் , #திருப்புல்லாணி ,#சத்திரக்குடி ,#குமரக்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது இது தொடர்பான தகவல்களையும் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களையும் சற்று முன்பு அதாவது 1:30 மணி வாக்கில்  நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்திருந்தேன்.

தற்சமயம் #சிதம்பரம் - #காட்டுமன்னார்கோயில் இடையே #குமராட்சி சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #மயிலாடுதுறை மாவட்டம் #சீர்காழி சுற்றுவட்டப் பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் #குடியாத்தம் பகுதிக்கு வடக்கே இருக்கும் #வேலூர் மாவட்ட பகுதிகளிலும் #இருமதி,#அனந்தூர் , #திருவாடனை அருகிலும் #மண்டபம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வறுகிண்றன.

இன்றும் அடுத்த 24 மணி நேரம் என்பது தமிழக வெப்பசலன மழைக்கான சிறப்பான நாளாக அமைய உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகலாம் நான் அனைத்து உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் பெயர்களையும் இங்கே குறிப்பிட விருபவில்லை.பல்வேறு மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று #மதுரை மாவட்ட பகுதிகள் உட்பட தென் உள் மாவட்டங்களிலும் சற்று அதிகமான இடங்களில் மழை பதிவாகலாம்.இன்றும் #சேலம் , #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் #நீலகிரி மாவட்ட கிழக்கு பகுதிகள் உட்பட மேற்கு உள் மாவட்டங்களிலும் #கிருஷ்ணகிரி , #வேலூர் , #திருப்பத்தூர் ,#தர்மபுரி ,#ராணிப்பேட்டை ,#திருவள்ளூர் ,#சென்னை ,#புதுச்சேரி , #விழுப்புரம் ,#செங்கல்பட்டு ,#கடலூர் ,#திருவண்ணாமலை ,#மயிலாடுதுறை என பல்வேறு வட உள் , வட மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.நான் உதாரணத்துக்காக தான் சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறேன் மற்றபடி உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அடுத்த சில மணி நேரங்களில் நிகழ் நேர தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 117 மி.மீ
அகரம்சீகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 116 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 115 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 78 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 75 மி.மீ
கீழச்செருவை (கடலூர் மாவட்டம்) - 75 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 70 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 67 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 62 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 58 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 56 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 52 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 47 மி.மீ
பெண்கொண்டபுரம்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 45 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) -  43 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 37 மி.மீ
திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம்) -  37 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 36 மி.மீ
மாதவரம் பால் பண்ணை(சென்னை மாநகர்) -  36 மி.மீ
ஆர்.கே.பேட்(திருவள்ளூர் மாவட்டம்) -  35 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
காவிரிப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 33 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  31 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 31 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) -  31 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 30 மி.மீ
ஆற்காடு (ராணிபேட்டை மாவட்டம்) - 29 மி.மீ
லாக்கூர் (கடலூர் மாவட்டம்) - 28 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
வடக்குத்துபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) -  23 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
கோலப்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  21 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) - 20 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) -  20 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 18 மி.மீ
எலந்தைகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
வாலாஜா (வேலூர் மாவட்டம்) - 18 மி.மீ 
குன்றத்தூர் (சென்னை மாநகர்) - 17 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 17 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) -  17 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 16 மி.மீ
திருப்பூர் (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 15 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 15 மி.மீ
தானிஷ்பேட்(சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
திருத்தணி(திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 14 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
பாலக்கோடு  ARG (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
காட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
உதகை வடக்கு (நீலகிரி மாவட்டம்) -  12 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 11 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 11 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 10 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 9 மி.மீ
பண்ருட்டி(கடலூர் மாவட்டம்) - 9 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 9 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  9 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) -  9 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 9 மி.மீ
போச்சம்பள்ளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
வானமாதேவி(கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
கொடைக்கானல் அருங்காட்சியாகம்(திண்டுக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 7 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) -  7 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
மாம்பலம் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 6 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
குடியாத்தம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 6 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 6 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 6 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 6 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
அருர் (தர்மபுரி மாவட்டம்) - 5 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்)- 5 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) -  5 மி.மீ


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சார்ந்த நண்பர்கள் நமது பக்கத்தில் முன்பு இணைந்து இருந்தீர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை #நெய்வேலி_AWS இல் 20 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கையில் #நெய்வேலி சுரங்கத்தில் கிட்டத்தட்ட 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருந்தது.நெய்வேலி பகுதியில் வசிக்கும் நண்பர்கள் யாருக்காவது இரண்டாம் சுரங்கம் மற்றும் டவுன்ஷிப் பகுதியின் மழை அளவுகள் கிடைத்திருந்தால் எனக்கு Message செய்யுங்கள்..... #நெய்வேலி இரண்டாம் சுரங்கத்தில் மிக சிறப்பான மழை பதிவாகியிருக்கும் என நம்புகிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக