இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஜூன், 2020

18.06.2020 Today's Weather Forecast in tamil | Last 24 hours rainfall data of tamilnadu and puducherry

0
18-06-2020 நேரம் காலை 10:50 மணி நாம் எதிர்பார்த்தது போல நேற்று #திண்டிவனம் , #செஞ்சி , #புதுக்கோட்டை உட்பட #விழுப்புரம் , #தஞ்சை மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது மேலும் வழக்கம் போல #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் நல்ல மழை பதிவாகி இருப்பதையும் கிடைத்திருக்க மழை அளவுகளை கொண்டு உறுதிசெய்ய முடிகிறது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இதே சூழல்களே தொடரும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் #புலிகேட் ஏரியை ஒட்டிய #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.#சென்னை மாநகர் மற்றும் புதுச்சேரிக்கான வாய்ப்புகளை பொறுத்தவரையில் அதனை பிற்பகலில் குரல் பதிவில் உறுதி செய்கிறேன் மேலும் விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களையும் அதனுடன் இனைத்து பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மேற்கு மாநிலங்களின் சில பகுதிகளின் நிலவரம்

#Mormugoa - 136 மி.மீ
#Panjim - 98 மி.மீ
#Karwar - 109 மி.மீ

தமிழகத்தின் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
சின்னல்லாறு (கோவை மாவட்டம்) - 67 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 57 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 48 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 45 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 36 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 33 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவகம் (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 30 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
குடிமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 11 மி.மீ
வல்லம் (தஞ்சை மாவட்டம்) - 10 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  7 மி.மீ
கந்தவர்க்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
பாடந்துறை பிறையார் எஸ்டேட்  (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆழியாறு (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
உதகை  (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 5 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 4 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 3 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) -  3 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
துவாக்குடி (திருச்சி மாவட்டம்) - 1 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 1 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக