இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஜூன், 2020

10.06.2020 Upcoming weak weather forecast | First active phase of Southwest monsoon 2020 | Western Ghats of tamilnadu going to receive heavy rain in a upcoming weak

0
அடித்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

10-06-2020 நேரம் இரவு 9:00 மணி நாம் கடந்த வாரத்தில் எதிர்ப்பார்த்து இருந்தது போல தற்சமயம் மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Well_Marked_Low_Pressure_Area) என்கிற நிலையை அடையலாம்.தற்சமயம் அது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இது அதே திசையில் பயணித்து 12-06-2020 ஆம் தேதி வாக்கில் அது ஒடிசா அல்லது ஆந்திராவின் வடக்கு பகுதிகளின் வழியே நிலப்பகுதிகளுக்குள் நுழைந்து அதன் பின்னர் நிலத்திலயே மேற்கு-வட மேற்கு திசையில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பயணிக்கும்.இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய நாட்களில் தீவிரமடைய தொடங்கும்.

தீவிரமடைய தொடங்கும் தென்மேற்கு பருவமழை
==========================
தற்சமயம் #கோழிக்கோடு , #மங்களூரு உட்பட  கேரள மாநில வடக்கு மற்றும் கர்நாடக மாநில தெற்கு கடலோர மாவட்டங்களில் சிறப்பாக தென்மேற்கு திசை காற்று குவிந்து வருவதை காண முடிகிறது தற்சமயம் அப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சிறப்பாக பதிவாகி வரலாம்.நாளையும் இதே சுழல்களே தொடரும் 12-06-2020 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை அரபிக்கடலை ஒட்டியிருக்கும் #கேரளா , #கர்நாடகா ,#கோவா , #மஹாராஷ்டிரா உட்பட இந்தியாவின் மேற்கு மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தென்மேற்கு திசை காற்று எங்கு சிறப்பாக குவிகிறது என்பதனை பொறுத்து அப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நமது மேற்கு தொடர்ச்சி மழை பதிகளிலும் மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகலாம் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே மிககணமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.அதிலும் குறிப்பாக #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில்.

தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் இது நமக்கான பருவமழை கிடையாது.பொதுவாக அனைத்து பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கும்.அவ்வப்பொழுது உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் அல்லது தூறல் பதிவாகலாம்.  #தாராபுரம் , #அரவாகுறிச்சி உட்பட #பாலக்காடு_கணவாய்_காற்று பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் குறிப்பாக நாளை மறுநாள் முதல் இந்த காற்றின் வேக மாறுபட்டை அதிகமாக உணர தொடங்கலாம்.

தென்மேற்கு பருவமழையின் வீரியம் குறைந்த பிறகு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் உள்  மாவட்டங்களில் சிறப்பான வெப்பசலன மழை காத்திருக்கிறது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் அதிக பலணடைய வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================

நீலகிரி மாவட்டம் : 
###############
#எருமாடு ,#நெல்லியளம் , #அப்பர்பவாணி  ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.

கோவை மாவட்டம் : 
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு  , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.

தேனி மாவட்டம் : 
##############
 #பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.

கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.

நெல்லை மாவட்டம்:
==================
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக