10-06-2020 நேரம் பிற்பகல் 1:50 மணி நேற்று கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்சமயம் நாம் எதிர்பார்த்தது போல சற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Well_Marked_Low_Pressure_Area) என்கிற நிலையை அடையலாம்.மேலும் அதனுடைய நகர்வுகள் தொடர்பாக நாம் நிறைவே இதற்கு முந்தைய பகுதிகளில் அலசிவிட்டோம்.
அடுத்த 24 மணி நேர வானிலை
=====================
நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அருகே மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது.நேற்று நாம் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவை ஒட்டிய இன்றைய அதிகாலை நேரத்தில் #புலிகேட் ஏரி அருகே மழை மேகங்கள் குவிந்து இருந்ததை காண முடிந்தது #திருவள்ளூர் மாவட்ட வடக்கு பகுதிகளில் சில இடங்களில் மழையும் பதிவாகியுள்ளது.இன்றும் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் நேற்றை விட சிறப்பாகவே மழை மேகங்கள் திருவள்ளூர் மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர் பகுதிகளில் குவியலாம்.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளின் சில இடங்களில் மழை பதிவாகலாம். மேலும் தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.நிகழ் நேரத்தில் அடுத்த சில மணி நேரங்களில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
புதுச்சேரி மாநிலம்
==============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 25 மி.மீ
சுரக்குடி (காரைக்கால் மாவட்டம்) - 10 மி.மீ
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 2 மி.மீ
தமிழகம்
========
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 27 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 16 மி.மீ
பாடந்துறை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
சங்கிரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 11 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 11 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
மனல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 10 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 10 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 9 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 8 மி.மீ
மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
கொள்ளிடம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 8 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 7 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 5 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 5 மி.மீ
மயிலாடுதுறை(மயிலாடுதுறை மாவட்டம்) - 4 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 3 மி.மீ
அவலாஞ்சி(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
வாலாஜா (இராணிப்பேட்டை மாவட்டம்) - 1 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 1 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
#Puducherry_Weather