07-06-2020 நேரம் இரவு 8:45 மணி #கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் சிறப்பான பருவமழை மேகங்கள் நுழைந்து இருப்பதை காண முடிகிறது.#குளச்சல் , #தக்கலை , #மார்த்தாண்டம் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளிலும் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருவதை காண முடிகிறது.#கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகும் என நம்பலாம்.
அடுத்த சில மணி நேரங்களில் அதாவது நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.அதனை ஒட்டியிருக்கும் மேற்கு மாவட்டங்களில் அவ்வப்பொழுது சாரல் அல்லது தூறல் ஆங்காங்கே பதிவாகலாம் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழையும் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை.முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல அடுத்து வரக்கூடிய நாட்களில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் அது ஒடிசா அல்லது வடக்கு ஆந்திர பகுதிகள் அருகே உள்ளே நுழைந்து நிலத்தில் நகர தொடங்குகையில் தென்மேற்கு பருவமழையின் வீரியம் மென்மேலும் அதிகரிக்கும்.10-06-2020 ஆம் தேதிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் அதி கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.