இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஜூன், 2020

02.06.2020 NISARGA cyclone and it's updates | southwest monsoon in kerala | last 24 hours rainfall data of tamilnadu

0
02-06-2020 நேரம் காலை 10:20 மணி நான் நேற்று இரவு நேர பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது மேலும் #கேரள மாநில தெற்கு கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகியுள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மாநில கடலோர மாவட்டங்களிலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இன்று #கேரள மாநில வடக்கு கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் சிறப்பான மழை பதிவாகலாம்.மேலும் #கர்நாடக மாநில #காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட #கர்நாடக மாநில அநேக கடலோர மாவட்டங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

நேற்றைய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep_Depression) என்கிற நிலையில்  வலுப்பெற்று நிலைக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.அடுத்த சில மணி நேரங்களில் #NISARGA (#நிசர்கா) புயலானது அப்பகுதிகளில் உருவெடுக்கலாம் மேலும் 03-05-2020 ஆகிய நாளை மாலை அல்லது இரவு அது மும்பை க்கு அருகே உள்ள கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
பேச்சிப்பாரை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) - 99 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 84 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 79 மி.மீ
லோயர்கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 68 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 64 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 61 மி.மீ
துவாக்குடி IMTI (திருச்சி மாவட்டம்) -  58 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 53 மிமீ.
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சை மாவட்டம்) - 52 மி.மீ 
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  47 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 45 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  45 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  44 மி.மீ
சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  41 மி.மீ
திருப்பதிச்சாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  40 மி.மீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) -  39 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 37 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) -  37 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 35 மி.மீ
சிவலோகம்(கன்னியாகுமரி மாவட்டம்) -  34 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 33 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 31 மி.மீ
கோவில்பட்டி (திருச்சி மாவட்டம்) - 30 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 29 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) -  24 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம்) -  20 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) -  19 மி.மீ
ஆரணி ARG (திருவண்ணாமலை மாவட்டம்) -  19.மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
கல்லணை (தஞ்சை மாவட்டம்)- 17 மி.மீ
இடையபட்டி (மதுரை மாவட்டம்) - 17 மி.மீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி மாவட்டம்) -  17 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 17 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  16 மி.மீ
ஜமீன் கோரட்டுர் (திருவள்ளூர் மாவட்டம்) - 16 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
லால்குடி (திருச்சி மாவட்டம்) - 16 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
மணிமுத்தாறு அணை  (நெல்லை மாவட்டம்) -  13 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -  12 மி.மீ
மாயனூர் (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
திருச்சி பேருந்து நிலையம் (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
பொன்மலை (திருச்சி மாவட்டம்) - 9 மி.மீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 8 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 8 மி.மீ
அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 8 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்)- 8 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 7 மி.மீ
திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம்) - 7 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
சமயபுரம் (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) -  5 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
குப்பம்பட்டி (திருச்சி மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) -  5 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 4 மி.மீ
ஆற்காடு (இராணிப்பேட்டை மாவட்டம்) - 4 மி.மீ
குளித்தளை (கரூர் மாவட்டம்) -  4 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) -3 மி.மீ
கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ
நவலூர் கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) -  3 மி.மீ
கிருஷ்ணராயபுரம் (கரூர் மாவட்டம்) - 3 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) -3 மி.மீ
மயிலம்பட்டி(கரூர் மாவட்டம்) - 3 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்)  - 3 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) -  2 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 2 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சேருமுல்லி(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -1 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 1 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) -1 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 1 மி.மீ
கந்தவர்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 1 மி.மீ

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக