31-05-2020 நேரம் இரவு 10:00 மணி #திருச்சி மாவட்டம் #முசிறி சுற்றுவட்டப் பகுதிகளில் நீண்ட நேரமாக மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்சமயம் #கரூர் மாவட்டம் #பஞ்சப்பட்டி ,#இரும்பொதிப்பட்டி ,#கழுகூர் , #உடையப்பட்டி ,#தோகைமலை பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது மேலும் சில மணி நேரங்களுக்கு #சேலம் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வந்ததையும் செயற்கைக்கோள் படங்களின் வாயிலாக அறிய முடிகிறது.அதே #நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் முன்பு பதிவாகி வந்தன.
நாளை அரபிக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் #NISARGA_CYCLONE (#நிசார்கா_புயல்)
======================
நான் இன்றைய எனது பிற்பகல் நேர குரல் பதிவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well_marked_low_preasure_area) அதே பகுதிகளில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்டு இருந்தேன்.சற்று முன்பு வானிலை ஆய்வு மையமும் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை அடைந்து இருப்பதாக அறிக்கையின் வாயிலாக தெரிவித்து உள்ளது.அது மேலும் தீவிரமடைந்து வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையலாம் (#Depression) .01-06-2020 ஆகிய நாளை அது அரபிக்கடல் பகுதியில் ஒரு புயலாக உருவெடுக்கலாம்.அவ்வாறு அது புயலாக உருவெடுக்கையில் அதற்கு #Nisarga என்கிற பெயர் வழங்கப்படும்.அதன் பிறகு அது தொடக்கத்தில் வட-வடமேற்கு திசையில் நகர முற்பட்டாலும் அதனபின்னர் நாளை மறுநாள் அது தனது திசையை வட-வடகிழக்கு என மாற்றிக்கொண்டு பயணிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதுவரையில் இன்று மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=============
ஏற்காடு AWS - 23 மி.மீ
நாமக்கல் - 8 மி.மீ
தர்மபுரி - 2 மி.மீ (மாலை 5:30 வரையில்)
அனைத்து பகுதிகளின் நிலவரத்தையும் நாளை பதிவிடுகிறேன்.