01-06-2020 நேரம் காலை 10:50 மணி நாம் எதிர்பார்த்தது போல நேற்றைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று தற்சமயம் 01-06-2020 (ஜூன் 1) ஆம் தேதியாகிய இன்று காலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (#Depression) என்கிற நிலையில் கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியே தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்ததை அறிய முடிகிறது.இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகியுள்ளது. மேலும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்து சில மணி நேரங்களில் மேலும் தீவிரமடைந்து ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (#Deep_Depression) என்கிற நிலையை அடையலாம்.அதன் பின்னர் அது மேலும் தீவிரமடைந்து #NISARGA_CYCLONE (#நிசர்கா) புயலாக உருவெடுத்து மஹார்ஷ்டிரம் அல்லது குஜராத் மாநில கடலோர பகுதிகளை 03-06-2020 அல்லது 04-06-2020 ஆம் தேதிகளின் வாக்கில் நெருங்க முற்படலாம்.
இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரத்தில் #கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் தெற்கு கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.உள் மாவட்ட மழை வாய்ப்புகளை பொறுத்தவரையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகளை பொறுத்தது இது தொடர்பாக பிற்பகலில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 79 மி.மீ
குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 37 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
சித்தாறு அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்) - 18 மி.மீ
மயிலம்பட்டி (கரூர் மாவட்டம்) - 17 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 13 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 12 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 9 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 8 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 7 மி.மீ
கடவூர் (கரூர் மாவட்டம்) - 7 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம்) - 5 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 4 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
அணைப்பளையம் (கரூர் மாவட்டம்) - 3 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பரமத்தி வேலூர் (நாமக்கல் மாவட்டம்) - 2 மி.மீ
தர்மபுரி PTO ( தர்மபுரி மாவட்டம்) - 2 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) -1 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
கரூர் (கரூர் மாவட்டம்) - 1 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
மோகனூர் (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ