31-05-2020 நேரம் காலை 11:30 மணி நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல லட்சத்தீவுகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Low_Pressure_Area) உருவானது அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் தீவிரமடந்து அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (#Depression) என்கிற நிலையை கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகலாம்.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.மேலும் ஓமன் கடல் பகுதிகளில் நேற்று நிலைக்கொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாம் அதிர்பார்த்தை போலவே அதற்கு அடுத்த நிலையை இன்னும் அடையவில்லை சாதகமற்ற #Vertical_Wind_Shear இன் காரணமாக மேற்கு -தென் மேற்கு திசையில் நகர்ந்து அந்த ஏமன் பகுதிகளில் அது மெல்ல மெல்ல அடுத்து வரக்கூடிய நாட்களில் வலுவிழக்க தொடங்கலாம்.
பொதுவாக அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவுகள் அருகே நிலைகொண்டு இருப்பதால் தெற்கு கேரள மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் ஆங்காங்கே சில இடங்களில் ஈரப்பதம் மிக்க தென்மேற்கு திசை காற்றால் மழை பதிவாகலாம்.தென்காசி மற்றும் தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.உள் மாவட்ட மழை வாய்ப்புகளை பொறுத்தவரையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதி எவ்வாறு விலகி செல்கிறது என்பதனை பொறுத்தது மேலும் அதனுடைய நகர்வுகளுக்கு ஏற்ப கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் #நீலகிரி மற்றும் #கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.அதனுடைய தற்போதைய நகர்வுகளுக்கு ஏற்ப அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
விரகனூர் (சேலம் மாவட்டம்) - 74 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 41 மி.மீ
ஏறையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 39 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 35 மி.மீ
கதண்டப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 35 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 32 மி.மீ
மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஆலங்காயம்(திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) - 26 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 21 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
புதுசத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
சூலகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) - 16 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
ஆழியாறு (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
நேரமின்மை காரணமாக 10 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.இதற்கும் குறைவான அளவு மழை பதிவாகியிருக்கும் உங்களது பகுதியின் கடந்த 24 மணி நேர நிலவரத்தை அறிய விரும்பினால் உங்களது ஊரின் பெயரை Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.
=================
31-05-2020 நேரம் மாலை 6:00 மணி தற்சமயம் #சின்ன_தாராபுரம் , #தென்னிலை ,#ஈரோடு மாவட்டம் #சிவகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #அய்யம்பாளையம் சுற்றிவட்டப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம் மேலும் #கன்னிவாடி , #கொடுமுடி ,#நெடுங்கூர் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #மூலனூர் - #அரவாக்குறிச்சி இடையே #கன்னிவாடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #ஒட்டஞ்சத்திரம் - #விருப்பாட்சி இடைப்பட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #நாமக்கல் மாவட்டம் #திண்டமங்களம் மற்றும் #சேலம் மாவட்டம் #நாயினார்மலை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.#அரூர் அருகே #காரியப்பட்டி ,#வச்சட்டி பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வறுகிண்றன.
சில மணி நேரங்களுக்கு முன்பு #தர்மபுரி ,#நாட்ராம்பள்ளி ,#வாணியம்பாடி பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வகுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்ததும் மீண்டும் பதிவிடுகிறேன்.