30-05-2020 நேரம் மாலை 4:45 மணி #ஆந்திர மாநிலம் #குப்பம் பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் தற்சமயம் #கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பொழிவை ஏற்படுத்த தொடங்கியுள்ளன #கிருஷ்ணகிரி நகர பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #உளுந்தூர்பேட்டை அருகே #எலவசனூர் , #ஆலங்கிரி சுற்றிவட்டப் பகுதிகளில் நீண்ட நேரமாக வலுவான மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருவதை காண முடிகிறது அப்பகுதிகளில் கனமழை பதிவாகியிருக்க வேண்டும் தற்சமயமும் #எலவசனூர் ,#கிளியூர் , #கூத்தனூர் ,#கலமரத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #பரிக்கள் ,#திருநாவலூர் ,#செங்குறிச்சி பகுதிகளை நோக்கி மழை மேகங்கள் விரைந்து வருகின்றன.முன்னதாக சில மணி நேரங்களுக்கு முன்பு #தியாகதுர்கம் ,#கள்ளக்குறிச்சி மற்றும் #கடலூர் மாவட்ட மேற்கு பகுதியான #சேப்பாக்கம் , #நல்லூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் முன்பு மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.தற்சமயம் #திட்டக்குடி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
#திருப்பத்தூர் மாவட்டம் #ஏலகிரி ,#வாணியம்பாடி ,#நாட்ராம்பள்ளி சுற்றுவட்டப் பகுதிகளிலும் முன்பு மழை மேகங்கள் பதிவாகி வந்தன.#சேலம் மாவட்டம் #மேச்சேரி பகுதிகளிலும் தற்சமயம் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.முன்பு #திருவள்ளுர் மாவட்டத்தை ஒட்டிய ஆந்திர மாநில பகுதியான #நகரி அருகே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்சமயம் அவை வலுக்குறைய தொடங்கியுள்ளன.
30-05-2020 நேரம் காலை 11:15 மணி நாம் முன்பு எதிர்பார்த்தது போல 31-05-2020 ஆகிய நாளை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவுகள் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
தென்மேற்கு பருவமழை 2020 மற்றும் நாளை உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
============================
2020 ஆம் வருடம் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் கேரளாவில் இயல்பான அளவு மழை பதிவாகலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.மேலும் நாளை உருவாக இருக்கக்கூடிய அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையவும் வாய்ப்புகள் உண்டு.
ஓமன் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
==========================
இன்று காலை ஏமன் பகுதிகளை ஒட்டிய தெற்கு ஓமன் கடல் பகுதிகளில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) நிலைகொண்டு இருப்பதை காணமுடிந்தது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (#Deep_Depression) என்கிற நிலையை அடையலாம் மேலும் அது ஓமன் நாட்டின் கடல் பகுதியில் கரையை கடந்து பின்னர் புயலாக உருவெடுக்கலாம் என மாதிரிகள் காட்டி வருகின்றன.என்னை பொறுத்தவரையில் அதற்கான வாய்ப்புகள் குறைவு எனவே கருதுகிறேன்.என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.அதனால் தென்மேற்கு பருவமழைக்கோ , தமிழகத்துக்கோ எந்த விதமான பாதிப்புகளும் இல்லை நேரடியான மழை வாய்ப்புகள் என்றும் எதுவும் இருக்கப் போவது கிடையாது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
லோயர்கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 39 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 29 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 22 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 9 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 7 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 6 மி.மீ
பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 6 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 5 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) / 4 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) - 3 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 3 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) - 3 மி.மீ
மாசிநாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 2 மி.மீ
ஆயிங்குடி (தென்காசி மாவட்டம்) - 2 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
கண்ணிமார்(கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) -1 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ