இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 மே, 2020

2020 MAY 29 Today's weather report of tamilnadu | last 24 hours rainfall data in tamil | southwest monsoon | kerala coast | www.tamilnaduweather.com

0
29-05-2020 நேரம் காலை 9:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்தது போலவே பல்வேறு உள் மாவட்ட பகுதிகளிலும் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் #மதுரை மாவட்டம் #கள்ளிக்குடி சிவகங்கை மாவட்டம் #திருபுவனம் மற்றும் மதுரை மாவட்டம் #இடையப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளயது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பிற்பகல் , மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

2020 ஆம் ஆண்டு கேரள தென் மேற்கு பருவமழை
=======================
நான் தொடர்ந்து பல நாட்களாக பதிவிட்டு வருவதை போல அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகலாம்.கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பு அல்லது இயல்புக்கு ஓரிரு நாட்கள் முன்பாக தொடங்க வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டு இருந்தேன் அதற்கான காரணிகளையும் நமது Youtube பக்கத்தில் விளக்கியிருந்தேன்.இந்நிலையில் வானிலை ஆய்வு மையமும் முந்தைய தமது கருத்தில் இன்று மாறி தற்சமயம் ஜூன் 1 ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.குமரிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

அடுத்த 2 நாட்களில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உண்டு.அது உருவானதும் அதனுடைய நகர்வுகள் தொடர்பாக நான் விரிவாக பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம்) - 116 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 108 மி.மீ
இடையப்பட்டி (மதுரை மாவட்டம்) - 105 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம்) - 84 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 84 மி.மீ
தள்ளாகுலம் (மதுரை மாவட்டம்) - 81 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 81 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 75 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 74 மி.மீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) - 73 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 67 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 66 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 63 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 63 மி.மீ
சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 62 மி.மீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) -  61 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 59 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 59 மி.மீ
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) - 59 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 59 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 58 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 58 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சை மாவட்டம்) - 57 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 56 மி.மீ
குருங்குளம் (தஞ்சை மாவட்டம்) - 55 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) -  54 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 54 மி.மீ
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) -  54 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 52 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 51 மி.மீ
சூலூர் (கோவை மாவட்டம்) - 50 மி.மீ
இளந்தகுட்டைமேடு (ஈரோடு மாவட்டம்) - 50 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 50 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 49 மி.மீ
மடத்துக்குளம் தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 49 மி.மீ
சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) - 49 மி.மீ
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 49 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) -  48 மி.மீ
நம்பியூர் (ஈரோடு மாவட்டம்) - 46 மி.மீ
சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 44 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 44 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 43 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 43 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 43 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 42 மி.மீ
பெருங்களூர்(புதுக்கோட்டை மாவட்டம்) - 42 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 42 மி.மீ
அதானகோட்டை(தஞ்சை மாவட்டம்) - 40 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்) - 40 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 38 மி.மீ
திருபாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  37 மி.மீ
ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 36 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 36 மி.மீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  35 மி.மீ
பீளமேடு , கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 35 மி.மீ
ஊட்டி AWS (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 34 மி.மீ
திருநெல்வேலி AWS (நெல்லை மாவட்டம்) - 34 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 32 மி.மீ
பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) -  32 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
கொடிவேரி அணை (ஈரோடு மாவட்டம்) -  31 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 31 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 31 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 31 மி.மீ
அரண்மனைப்புதூர் (தேனி மாவட்டம்) - 30 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 29 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 29 மி.மீ
அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்) - 29 மி.மீ
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை(கோவை மாவட்டம்) - 29 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 28 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 28 மி.மீ
அரிமலம்(புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
வேங்கூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 27 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 27 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 27 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 27 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 26 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  26 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
சின்னகல்லார் (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
வல்லம்(தஞ்சை மாவட்டம்) - 25 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 25 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 23 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 23 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
 மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 23 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 22 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 22 மி.மீ
மொடக்குறிச்சி (ஈரோடு மாவட்டம்) - 21 மி.மீ
சிவலோகம்(கன்னியாகுமரி மாவட்டம்) - 21 மி.மீ
தானியாமங்கலம்(மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) -  21 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
மசினாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தனிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 20 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) -  20 மி.மீ
கோயம்புத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
கீழநிலை(புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 19 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) -  19 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
திருமூர்த்தி அருவி (திருப்பூர் மாவட்டம்) -  19 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 19 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 18 மி.மீ
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 18 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) -  18 மி.மீ
மானம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  17 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 17 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 17 மி.மீ
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 16 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  16 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
பிளவாக்கால் அணை (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  15 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 14 மி.மீ
குந்தா பாலம்  (நீலகிரி மாவட்டம்) -  14 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 11 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  10 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரேல்டு (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  10 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) -  10 மி.மீ

10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் தகவல்களை இங்கு இணைத்து இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக