இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 மே, 2020

28.05.2020 time afternoon 3:15 PM current weather scenario | upcoming hours rainfall possibilities

0
28-05-2020 நேரம் பிற்பகல் 3:10 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் படம் இன்று பிற்பகல் 2:50 மணி வாக்கில் பதிவானது #புதுக்கோட்டை ,  #தஞ்சை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #தஞ்சை - #புதுக்கோட்டை இடைப்பட்ட அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது குறிப்பாக #கந்தர்வக்கோட்டை , #வடவளம் ,#பெருங்களூர் , #சுண்டாம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் தற்சமயம் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை ராடார் படங்கிளின் வாயிலாக அறிய முடிகிறது. #நசன்டுப்பட்டி ,#பிள்ளையார்பட்டி ,#ரங்கியம் உட்பட #புதுக்கோட்டை மற்றும் #சிவகங்கை மாவட்டம் #திருக்கோஷ்டியூர் இடைப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.#காரைக்குடி அருகிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

நெல்லை மற்றும் ஸ்ரீவைகுண்டம் மழை மேகங்கள்
=====================
#நெல்லை மாநகராட்சி சுற்றுவட்டப் பகுதிகள் #வளநாடு , #பேட்டை ,#கருங்குளம் , #காயத்தாறு ,#ஸ்ரீவைகுண்டம் , #கழுகுமலை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #நெல்லை மற்றும் #தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இன்னும் சற்று நேரத்தில் #பட்டமடை  ,#செங்குளம் மற்றும் #கங்கைகொண்டான் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மழை மேகங்கள்
===================
தற்சமயம் #தேனி அருகிலும் #லட்சுமிபுரம் ,#பெரியகுளம் ,#ஆண்டிப்பட்டி , #தேவதானப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #கொடைக்கானல் - #பழனி இடைப்பட்ட பகுதிகளிலும் #பெரும்பாரை ,#பண்ணைக்காடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.

மேலும் தற்சமயம் #ஏலகிரி , #ஆலங்காயம் ,#ஜமுனமரத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன முன்னதாக சில மணி நேரங்களுக்கு முன்பு #குடியாத்தம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறியமுடிகிறது.மேலும் #விருதுநகர் மற்றும் #மதுரை மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சிறு சிறு மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக