28-05-2020 நேரம் இரவு 9:00 மணி தற்சமயம் #ஈரோடு மாவட்டம் #ஜெரிமலம் ,#மாவல்லம் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இந்நேரம் #ஹாசனூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை ஆங்காங்கே பதிவாக தொடங்கி இருக்கலாம் மேலும் தெற்கு கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து #தாளவாடி அருகே #மரூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் குவிய தொடங்கி இருப்பதை காண முடிகிறது.மேலும் #பெரம்பலூர் மாவட்டம் #பசம்பலூர் , #கைகளத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.சில மணி நேரங்களுக்கு முன்பு #ஈரோடு மாவட்டம் #ஈரோடு , #சென்னிமலை , #இங்கூர் , #பவானி , #அந்தியூர் பகுதிகளிலும் முன்பு மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.இன்று #மதுரை ,#விருதுநகர் ,#புதுக்கோட்டை ,#தஞ்சை ,#திருப்பத்தூர் என பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகியுள்ளது.உங்கள் ஊரில் பதிவான மழையின் காணொளியை எனக்கு Whatsapp அல்லது Message செய்யுங்கள்.
நாளையும் உள் மாவட்டங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.வழக்கமாக நான் சொல்வது தான் இன்றும் நேற்றும் மழை பதிவாகாத உள் மாவட்டங்களில் நாளை மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம்.
இதுவரையில் இன்று பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி தகவல்கள் கிடைக்கப்பெற்ற சில பகுதிகளின் மழை நிலவரம்
=================
லோயர் கோதையார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 71 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 68 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 60 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 58 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 54 மி.மீ
ஈரோடு AWS (ஈரோடு மாவட்டம்) - 50 மி.மீ
பேச்சிப்பாரை AWS (கன்னியாகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 39 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
மதுரை (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
அனைத்து பகுதிகளின் நிலவரத்தையும் நாளை காலை பதிவிடுகிறேன்.