இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 மே, 2020

28 MAY 2020 Today's tamilandu weather forecast | upcoming 24 hours possibilities |last 24 hours rainfall data | www.tamilnaduweather.com

0
28-05-2020 நேரம் பிற்பகல் 1:30 மணி இன்றைய வானிலையை பொறுத்தவரையில் நேற்றைக்கும் இன்றைக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் என்று எதுவும் இல்லை.இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் உள் மாவட்டங்களில் உருவாக இருக்கும் மழை மேகங்கள் சிறப்பான முறையில் தீவிரமடைய ஏதுவான சூழல்களே நிலவி வருகின்றன. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் , மேற்கு உள் , வட உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சிறப்பான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தற்சமயம் திண்டுக்கல் மாவட்டம் #பாலக்குறிச்சி ,#தூத்துக்குடி மாவட்டம் #ஒட்டப்பிடாரம் மற்றும் #கொடைக்கானல் பகுதிக்கு மேற்கே #மன்னவனூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன.

அனைத்து உள் மாவட்டங்களின் பெயர்களையும் நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை நேற்று மழை பதிவாகாத சில உள் மாவட்டகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகும் என நம்பலாம்.இவைத்தவிர்த்து இன்று #வேலூர் மற்றும் #திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
============================
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 65 மி.மீ
ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 58 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 40 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 38 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 24 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 22 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
வெள்ளக்கோவில் (திருப்பூர் மாவட்டம்) - 19 மி.மீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) - 19 மி.மீ
தளுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 19 மி.மீ
ஏற்காடு AWS (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
தளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
சண்டையூர் (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 13 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம்) - 12 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 12 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
சத்தியமங்கலம் AWS (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 9 மி.மீ
பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 7 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 7 மி.மீ
சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
 மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 4 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
பாலக்கோடு ARG (தர்மபுரி மாவட்டம்) - 4 மி.மீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பீளமேடு, கோவை விமானநிலையம் (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 3 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 3 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 3 மி.மீ
அன்னூர் (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 3 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  3 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 2 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 2 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
எம்ரால்டு (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 1 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 1 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 1 மி.மீ
பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) - 1 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 1 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) -1 மி.மீ
பையூர் AWS (தர்மபுரி மாவட்டம்) - 1 மி.மீ


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக