27-05-2020 நேரம் மாலை 6:45 மணி தற்சமயம் #ஆம்பூர் உட்பட #திருப்பத்தூர் மாவட்ட வடக்கு பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் குவிந்து வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #வேலூர் மாவட்டத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பத்துவாகலாம்.அதேபோல #திருப்பூர் மாநகரை கடந்த மழை மேகங்கள் தற்சமயம் #தெற்கு_நல்லூர் , #ஊத்துக்குளி , #பாண்டியூர் ,#நடுபட்டி ,#பெருந்தொழுவு சுற்றுவட்டப் பகுதிகளில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அப்பகுதிகளில் மிக பலத்த சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய வெப்பசலன மழை தற்சமயம் பதிவாகி வரலாம் மேலும் #திருப்பரங்குன்றம் , #திருமங்கலம் , #நாகமலைபுதுக்கோட்டை மற்றும் #விருதுநகர் மாவட்டம் #காரியப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #மதுரை மாநகரின் மேற்கு புறநகர் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #வெள்ளக்கோயில் ,#அய்யம்பாளையம் மற்றும் #மூலனூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.