27-05-2020 நேரம் பிற்பகல் 1:00 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று தமிழக மேற்கு தொடர்ச்சி மலை , மேற்கு உள் ,தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் சிறப்பான வெப்பசலன மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்புகள் உண்டு.#பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட #கர்நாடக மாநில தெற்கு பகுதிகளிலும் #கேரள மாநிலத்திலும் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
தென்-தென்மேற்கு (South-south West) திசையிலிருந்து எப்பொழுது எல்லாம் பால்க் ஜலசந்தி பகுதிகளில் காற்று வீசுகிறதோ அப்பொழுது எல்லாம் #திருவாரூர் அல்லது #தஞ்சை மாவட்ட தெற்கு பகுதிகளில் மழை இருக்கும் தற்சமயம் #திருத்துறைப்பூண்டி -#முத்துப்பேட்டை இடைப்பட்ட அநேக பகுதிகளிலும் #அதானி உட்பட #தஞ்சை மாவட்டம் #ஜமாலியா மற்றும் #புதுக்கோட்டை மாவட்டம் #கட்டுமாவடி இடைப்பட்ட பகுதிகளில் பதிவாகி வரும் மழை மேகங்களே அதற்கு சாட்சி.
இன்று தமிழக உள் மாவட்டங்களில் பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் இதே சுழல்களே தொடரும்.நான் முன்பே குறிப்பிட்டு இருந்தது போல இன்று #பெங்களூரு மற்றும் அதன் #புறநகர் பகுதிகள் உட்பட #ஓசூர் , #கிருஷ்ணகிரி ,#தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #தர்மபுரி , #சேலம் , #ஈரோடு , #நாமக்கல் , #கரூர் , #பெரம்பலூர் , #புதுக்கோட்டை , #மதுரை , #சிவகங்கை , #திண்டுக்கல் என அநேக உள் மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.ஏன் எங்கள் மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவில்லை என கேட்காதீர்கள். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியானது உள் மாவட்டங்களில் உருவாகும் மழை மேகங்கள் விரைவில் வலுவிழக்காமல் நீண்ட நேரம் உயிர் பிழைத்து இருக்க வழிவகை செய்கிறது.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
========================
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
பேச்சிப்பாறை ARG (கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 16 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 6 மி.மீ
வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
உதகை (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 4 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
#Puducherry_Weather