3.6.23 அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் புதிய சுழற்சி உருவாகும் அதன் பின்னர் வரக்கூடிய நாட்களில் அது மேன்மேலும் தீவிரமடைந்து ஒரு புயலாக அரபிக்கடல் பகுதிகளில் உருவெடுக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உண்டு.அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய வாரத்தில் தீவிரம் அடையும் ஆகையால் தமிழக , கேரள , கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் , கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை உறுதி...எதிர்பார்ப்புடனும் , எச்சரிக்கையுடனும் காத்திருங்கள்..
விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/KOrg6TZeywM
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 52மிமீ
திருப்பூர் PWD IB (திருப்பூர்) 42மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 36.6மிமீ
பார்வுட் (நீலகிரி), பைகாரா (நீலகிரி) 30மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 27மிமீ
செஞ்சி (விழுப்புரம்) 25மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), சாண்டியனூள்ளா (நீலகிரி) 22மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 21மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 20மிமீ
கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 19மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 16மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 15மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 13.6மிமீ
பூண்டி (திருவள்ளூர்) 13மிமீ
சூலூர் (கோயம்புத்தூர்) 12மிமீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 11மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 10மிமீ
தேவாலா (நீலகிரி) 8மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 7.6மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 6.8மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 6.4மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 6மிமீ
பல்லடம் (திருப்பூர்) 5மிமீ
வேலூர் (வேலூர்) 4.8மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 4.5மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 3.2மிமீ
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), மஞ்சளாறு (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்), சேரங்கோடு (நீலகிரி), போர்த்திமுண்டு (நீலகிரி) 3மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 2.4மிமீ
பெரியகுளம் (தேனி),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 2மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 1.3மிமீ
சென்னிமலை (ஈரோடு),சின்கோனா (கோயம்புத்தூர்),கேத்தி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் இமானுவேல் 🙏