22.11.21 இன்று தென்கிழக்கு வங்கக்கடல் சுழற்சி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளை அடையும் 23.11.21 ஆகிய அது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையலாம் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையையும் அடையும்.
👉இன்று கிழக்கு திசை காற்றின் வருகையால் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் மழை பதிவானது இது தொடக்கம் தான் 26.11.21 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு தொடர் கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.
👉23.11.21 ஆகிய நாளை முதல் தென் கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் மழை பதிவாகும் #டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அதற்கு அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழை உண்டு இந்த மாத இறுதி 3 நாட்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கும் சில பகுதிகளில் வாய்ப்புகள் உண்டு.
👉இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் மீண்டும் கடலோர பகுதிகளில் மழை பதிவாகலாம்.
அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
தென்பறநாடு (திருச்சி), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 40மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 35மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 31மிமீ
ஆவடி (திருவள்ளூர்) 30மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 27.8மிமீ
எடப்பாடி (சேலம்) 25மிமீ
தேவாலா (நீலகிரி) 23மிமீ
நந்தனம் ARG (சென்னை) 20.5மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 18.8மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்),சேரங்கோடு (நீலகிரி) 18மிமீ
MRC நகர் (சென்னை), தரமணி ARG (சென்னை) 16.5மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 16மிமீ
எருமைபட்டி (நாமக்கல்) 13மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 12.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்) 12மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 11.8மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு) 11மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 10.6மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 10மிமீ
அம்பத்தூர் (சென்னை)ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 9மிமீ
பெரம்பூர் (சென்னை) 8.3மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 8மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 7மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 6.2மிமீ
மோகனூர் (நாமக்கல்), புதுச்சத்திரம் (நாமக்கல்) 6மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 5.4மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 5மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 4.5மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை) 4.3மிமீ
எழிலகம் (சென்னை), ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 4.2மிமீ
சேலம் (சேலம்) 4.1மிமீ
துறையூர் (திருச்சி),குப்பநத்தம் (கடலூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 4மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.4மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.3மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்),மைலம்பட்டி (கரூர்), ஓமலூர் (சேலம்), பரமத்திவேலூர் (நாமக்கல்) 3மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 2.6மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி),ஆலத்தூர் (சென்னை) 2.5மிமீ
போளூர் (திருவண்ணாமலை), கொடுமுடி (ஈரோடு) 2.4மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வானூர் (விழுப்புரம்), சேந்தமங்கலம் (நாமக்கல்),பார்வுட் (நீலகிரி) 2மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மேட்டூர் (சேலம்) 1.6மிமீ
வேலூர் (வேலூர்), விருத்தாசலம் (கடலூர்), சென்னிமலை (ஈரோடு), மஞ்சளாறு (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்), பரமத்தி (கரூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்) சோத்துப்பாறை அணை (தேனி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்