இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஜூலை, 2021

12 July 2021 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் | Today's weather report | Last 24 hours rainfall data

0
12.07.2021 நேரம் காலை 10:20 மணி இன்று அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நிகழ இருக்கிறது என்பது உங்களுக்கே தெரிந்தது தான் வடக்கு அதிராவை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் நாட்டின் மேற்கு கடலோர மாநிலங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீரியம் அடைந்த இருக்கிறது.அடுத்த 24 மணி நேரத்தில் #கர்நாடக மாநில கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் #மஹாராஷ்டிர மாநில  தெற்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் ( #Ratnagiri) கனமழை பதிவாக இருக்கிறது #கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மழை பதிவாகும் இரவு , நள்ளிரவு , அதிகாலை ,நேரங்களில் மழைப் பொழியும் அளவு அதிகமாக இருக்கும்.

தமிழக உள் மற்றும் கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும் வரண்ட சூழல்களே தொடரும் அங்கும் இங்குமாக திடீரென காற்றின் வேகம் அதிகரித்து வானம் இருட்டிக்கொண்டு சில நிமிட சாரல் , தூரல் அல்லது லேசான மழை பதிவானால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள். இது இந்த கால்கட்டத்தில் இயல்பு தான் மற்றபடி வலுவான கனமழை உள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கிடையாது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 72மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 47மிமீ

அவலாஞ்சி (நீலகிரி) 41மிமீ

லோயர் நிரார் (கோயம்புத்தூர்) 35மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அப்பர் பவானி (நீலகிரி) 28மிமீ

முக்கூத்தி அணை (நீலகிரி) 25மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 24.3மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 22மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 21மிமீ

போர்த்திமுண்ட் (நீலகிரி) 20மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 19மிமீ

அம்பத்தூர் (சென்னை) 16மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 15.4மிமீ

தேவாலா (நீலகிரி) 15மிமீ

கிளன்மோர்கன் (நீலகிரி) 14மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 13மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 12மிமீ

புழல் ARG (திருவள்ளூர்) 11மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 10.8மிமீ

ஸ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 10.4மிமீ

சாத்தையாறு அணை (மதுரை) 10மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை) 9மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 8.5மிமீ

பூண்டி (திருவள்ளூர்),பார்வுட் (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி  (நீலகிரி) 8மிமீ

திருத்தணி (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), எம்ரேல்டு (நீலகிரி) 7மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை) 6.6மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்), உதகமண்டலம் (நீலகிரி) 6மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 5மிமீ

பெரியார் (தேனி) 4.8மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (சென்னை),அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4.5மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 4.4மிமீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி) 4மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்),கெத்தி (நீலகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), குண்டடம் (திருப்பூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 3மிமீ

தேக்கடி (தேனி) 2.8மிமீ

கல்லட்டி (நீலகிரி) 2.3மிமீ

GOVERNMENT HS SCHOOL எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 2.2மிமீ

மசினக்குடி (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை), நந்தனம் ARG (சென்னை), கூடலூர் (தேனி), ஆலத்தூர் (சென்னை) 1.5மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 1.4மிமீ

உத்தமபாளையம் (தேனி) 1.3மிமீ

செங்கோட்டை (தென்காசி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தரமணி ARG (சென்னை), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக