16.06.2021 நேரம் பிற்பகல் 12:15 மணி தற்சமயம் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது கிழக்கு உத்திரபிரேதம் மற்றும் அதனை ஒட்டிய பீகார் மாநில மேற்கு பகுதிகளில் நிலைக்கொண்டு உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #மூக்குறுத்தி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 170 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக #பெரியார்_அணை சுற்றுவட்டப் பகுதிகளில் 110 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் #வால்பாறை , #பெரியார்_அணை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுவாக பதிவாகும் அதேசமயம் வட மாவட்டங்களில் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம் இவைத்தவிர்த்து #திருப்பத்தூர் மாவட்ட பகுதிகள் #ஜவ்வாதுமலை பகுதிகள் அதனை ஒட்டிய #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகள் இவைமட்டும் அல்லாது #வேலூர் , #ராணிப்பேட்டை , #காஞ்சிபுரம் , #செங்கல்பட்டு , #திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் #சேலம் மாவட்ட பகுதிகள் மற்றும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் #திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகலாம் #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட சாலைகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு விரிவான வானிலை அறிக்கையை அடுத்த சில நிமிடங்களில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
மூக்குருத்தி அணை (நீலகிரி) 170மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 136மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 113.7மிமீ
பெரியார் (தேனி) 110.2மிமீ
போர்த்திமுனை (நீலகிரி) 110மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 107மிமீ
பார்சன்வாலி (நீலகிரி) 78மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 73மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 68மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 64மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 61மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 56மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 52மிமீ
தேவாலா (நீலகிரி) 47மிமீ
செருமுல்லி (நீலகிரி) 46மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி) 42மிமீ
தேக்கடி (தேனி) 39.4மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 39மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 38மிமீ
தூணக்கடவு (கோயம்புத்தூர்) 33மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 21மிமீ
மசினக்குடி(நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 20மிமீ
செங்கோட்டை (தென்காசி), சிவலோகம் (கன்னியாகுமரி) 19மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 18.2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 17.6மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 17மிமீ
உப்பாறு (கோயம்புத்தூர்) 16மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 15.8மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 15.6மிமீ
பார்வுட் (நீலகிரி) 15மிமீ
தென்காசி (தென்காசி), உதகமண்டலம் aws (நீலகிரி) 13மிமீ
நடுவட்டம்(நீலகிரி) 12.5மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 7.6மிமீ
கெத்தி (நீலகிரி) 7மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 6மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 5.4மிமீ
பல்லடம் (திருப்பூர்) 5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.8மிமீ
திருமூர்த்தி மலை IB (திருப்பூர்),பிளவுக்கல் அணை (விருதுநகர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 4.2மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 4மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்) 2.5மிமீ
கூடலூர் (தேனி) 2.4மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), சங்கரன்கோவில் (தென்காசி) 2மிமீ
ஆயக்குடி (தென்காசி),தாளாவாடி (ஈரோடு), உத்தமபாளையம் (தேனி) 1.6மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com