19.02.2021 நேரம் காலை 10:30 மணி கடந்த குரல் பதிவுகளில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல இலங்கையின் வடக்கு கடலோர மற்றும் வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது.மேலும் தமிழக வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய கடல் பகுதிகளிலும் சிறு சிறு மழை மேகங்கள் குவியத் தொடங்கியுள்ளன.மேலும் நான் முன்பு நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர குரல் பதிவில் குறிப்பிட்டுக் கூறியிருந்ததைப் போல தற்பொழுது #கிளிநொச்சி சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் #முல்லைத்தீவு பகுதியை ஒட்டிய கடல் பகுதிகளில் மிக சிறப்பாக காற்று குவிந்து கொண்டு உள்ளது #முல்லைதீவு பகுதிகளில் மீண்டும் மழை பதிவாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிகாலை நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் தூரல் பதிவாகியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது அடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் சாரல் , தூரல் மற்றும் லேசான மழை பதிவாகலாம்.#நாகை மாவட்ட தெற்கு பகுதி மற்றும் #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் மழை பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி சில பகுதிகளின் நிலவரம்
=====================
பாபநாசம் அணை (நெல்லை மாவட்டம்) - 3 மி.மீ
சோத்துப்பாரை அணை (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 0.2 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 0.2 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகள் தொடர்பான விரிவான அறிக்கை நமது youtube பக்கத்தில் பதிவிடப்படும்.