07.01.2021 நேரம் இரவு 8:15 மணி தற்சமயம் #மேலூர் , #சிவகங்கை , #நத்தம் , #துவரங்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன குறிப்பாக #மேலூர் - #சிவகங்கை இடைப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் தரமான வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #மதுரை மாநகரிலும் ஆங்காங்கே மழை பதிவாகும் அதேபோல #திண்டுக்கல் - #மதுரை இடைப்பட்ட அநேக இடங்களிலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை பதிவாகும் இவைத்தவிர்த்து #கோபிசெட்டிப்பாளையம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #சங்கராபுரம் - #அரூர் இடைப்பட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன. - https://youtu.be/NK2gCE4MNFI
கடலோர மாவட்ட மக்கள் அடுத்த சுற்று மழையை நாளை முதல் எதிர்க்கொள்ள தயாராகுங்கள்.13.01.2021 ஆம் தேதி வரையில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கும் இங்குமாக மழை பதிவாகி கொண்டுதான் இருக்கும் - https://youtu.be/FoGFBRJCDOw
அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தின் நிறைய இடங்களில் மழை பதிவாகும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 57 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் அதன் இயல்பான அளவான 5 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 1135% சதவிகிதம் அதிகம்.2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வரலாற்றில் பொறிக்கப்படும்.
மீண்டும் இரவு குரல் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com