04.01.2020 நேரம் காலை 11:00 மணி நாம் இதற்கு முந்தைய குரல் பதிவுகளில் விவாதித்து இருந்தது போல இன்று இரவு/நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை அதிகரிக்க தொடங்கும் தற்பொழுது நிலவி வரும் தற்காலிக இடைவெளியை அனுபவித்துக் கொள்ளுங்கள் நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் படத்தினை பார்த்தாலே இந்த மழை வாய்ப்புகள் எதனால் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்ளலாம்.
தற்சமயம் #புதுச்சேரி மற்றும் அதன் அருகே இருக்கும் தமிழக பகுதிகளை ஒட்டிய வங்க்ககடல் பகுதிகளில் சிறிய மெலிய மழை மேகங்கள் காணப்படுகின்றன அவை ஊடுருவுகையில் #புதுச்சேரி மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் லேசானது முதல் மிதமான சில நிமிட மழை அடுத்த சில மணி நேரங்களில் பதிவாகும்.நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் #புதுச்சேரியிலும் மழை சற்று அதிகரிக்க தொடங்கும் 06.01.2020 ஆம் தேதி வாக்கில் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழையும் பதிவாகும்.அடுத்து வரக்கூடிய நாட்களில் தென் உள் , தென் , தென் கடலோர , மேற்கு உள் , உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மழை பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி பகுதியில் 13 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 7 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் #தூத்துக்குடி பகுதியில் 18 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) - 63 மி.மீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம் மாவட்டம்) - 61 மி.மீ
நகுடி(புதுக்கோட்டை மாவட்டம்) - 41 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 37 மி.மீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்) - 36 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 36 மி.மீ
ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம்) - 36 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 36 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 35 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 35 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) - 33 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம்) - 33 மி.மீ
காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) - 33 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 29 மி.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) - 28 மி.மீ
மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 26 மி.மீ
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) - 25 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 25 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 24 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) - 23 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம்) - 23 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 22 மி.மீ
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 22 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 21 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
மடுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 21 மி.மீ
இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்) - 20 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 20 மி.மீ
லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
வெட்டிக்காடு (தஞ்சை மாவட்டம்) - 20 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 20 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com
20 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.