இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2020

26.11.2020 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்? | Upcoming weeks weather overlook

0
26.11.2020 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?
================
26.11.2020 நேரம் மாலை 4:50 மணி #மேடன்_ஜூலியன்_அலைவு (#MJO) தற்பொழுது அதன் 3 வது கட்டத்தில் (Phase 3) 1 க்கும் குறைவான வீச்சு அளவுடன் (Amplitude less than one) வலு குறைந்த நிலையில் இருப்பதை அறிய முடிகிறது அடுத்து வரக்கூடிய சில நாட்களில் அது வலுக்குறைந்த நிலையில் அதனுடைய 4 வது கட்டத்தை (Phase 4)  அடையும்.நமது வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் #Madden_julian_Oscillation நமக்கு சாதகமான கட்டத்தில் இருந்தாலே போதுமானது அதன் வலு ஒரு பொருட்டல்ல.அதன் அடிப்படையில் அடுத்து வரக்கூடிய நாட்களும் பருவமழைக்கு சாதகமானதாக தான் இருக்கப் போகிறது .வங்கக்கடல் பகுதிகளில் சுழற்சிகள் உருவாகவும் அது வலு பெற்று அடுத்தடுத்த படி நிலைகளை எளிதாக அடையவும் மிக சிறப்பான ஒரு காலநிலை என்றே அடுத்து வரக்கூடிய நாட்களை சொல்லலாம்.

MJO என்றால் என்ன அதனை எப்படி track செய்வது என்பதனை அறிய - https://youtu.be/drbJK3nHGzo

#புதுச்சேரி அருகே அதிகாலை கரையை கடந்த #நிவர் புயல் சில மணி நேரங்களுக்கு முன்பாக தெற்கு ஆந்திர பகுதிகளில்  நிலைக்கொண்டு இருப்பதை அறிய முடிந்தது அது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் ம
வலுகுறைந்து ஒரு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழந்து போகும்.அதனுடைய தாக்கம் குறைந்ததும் 27-11-2020 ஆகிய நாளை காற்று நிலையற்ற தன்மையின்  (Wind_instabilty) காரணமாக உள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகும்.

28-11-2020 அல்லது 29-11-2020 தேதிகளின் வாக்கில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
=========================
28-11-2020 ஆம் தேதி முதல் வட கிழக்கு திசை காற்று மீண்டும் கடலோர
மாவட்டங்களுக்கு திரும்பும் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகும்.அதே சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உண்டு அது அதன் பின்னர் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கையை நோக்கி பயணிக்கலாம்.நான் முன்னதாக இந்த பதிவின் தொடக்கத்தில் தெரிவித்து இருந்தது போலவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து அதன் அடுத்தடுத்த படி நிலைகளை அடைய மிக சாதகமான காலநிலையே தற்பொழுது வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி புயலாக வருமா ?
======================
மாதிரிகளை பார்த்து பிறக்காத புயலுக்கு பெயர் வைத்து அதற்கு மொட்டையடித்து காதுகுத்தும் கும்பல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.இவை அனைத்துமே தவறான ஒரு முன் உதாரணத்தின் விளைவு அதனை நம்மால் சரி செய்ய இயலாது...

ஒரு புயலுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது என்பதனை தெளிவாக அறிய - https://youtu.be/Y8-snPxgah0

அடுத்து உருவாக இருக்கும் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் அதாவது 1-12-2020 அல்லது  2-12-2020 ஆம் தேதி வாக்கில்  மழை மீன்டும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.ஆனால் அது புயலாக உருவெடுக்குமா? இல்லையா ? அல்லது தமிழகத்தில் கரையை கடக்குமா ? இல்லையா? என்பதை போன்ற கேள்விகளுக்கான எனது பதில் இதுதான் " காத்திருங்கள்" நம்மை தற்காத்துக்கொள்ள 48 மணி நேரமே போதுமானது 1 மாதத்திற்கு முன்போ 1 வாரத்திற்கு முன்போ மாதிரிகளை பார்த்து கதை எழுதினால் அது யாருக்கும் பயன் வழங்காது.

அது உருவாகட்டும் பின்னர் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நெருங்கட்டும் அதன் பின்னர் அதன் நகர்வுகளை நாம் அறிவியல் உதவியுடன் விரிவாக ஆராயலாம்...

பின்குறிப்பு : #MJO அதனுடைய 4 மற்றும் 5 வது கட்டங்களில் இருக்கும் வரையில் நாம் இதைப்போன்ற அடுத்தடுத்த சுழற்சிகளை நமது வங்கக்கடல் பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.

By

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக